தலாய் லாமா, சர்வதேசத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்வதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. வெளிநாடுகளின் அரசியல் தலைவர்கள், எந்த சார்பிலும் எந்த வடிவத்திலும் தலாய் லாமாவுடன் தொடர்பு கொள்வதையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது. சீனாவின் இந்த நிலைப்பாடு நிலையாகவும், தெளிவாகவும் இருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ச்சின்காங் 12ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
ஒபாமா தலாய் லாமாவைச் சந்தித்துரையாடுவதை, 90 விழுக்காட்டுக்கு மேலான சீனர்கள் எதிர்க்கின்றனர். சீனாவின் சில இணையத்தள கருத்துக்கணிப்புகள், இதைக் காட்டுகின்றன. சீன மக்களின் கருத்துக்களை புறந்தள்ளக் கூடாது. அமெரிக்கா, சீன மக்களின் கருத்தை கவனத்தில் கொண்டு, சீன உரிமைப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டுக்கும் ஒன்றிணைப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சீனா கோருவதாக ச்சின்காங் கூறினார்.
|