• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-12 17:12:27    
81 பேர் குடும்பம்

cri
81 பேர் குடும்பம்

குவாங்சி ச்சுவான் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான நான்னிங்கில் 5 தலைமுறைகளை கொண்ட ஒரு குடும்பம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்து வருகின்றதாம். நான்னிங் நகரின் ச்சிங்லிங் மாவட்டத்தில், லெயிங்போ எனும் கிராமத்தில் மொத்தம் 81 பேரை கொண்ட இந்த குடும்பம் வாழ்ந்து வருகிறது. இதில் மிக மூத்த உறுப்பினரது வயது 95. இவ்வளவு பெரிய குடும்பமாக இருந்தபோதும். ஒரே வீட்டில் மிக மிக மகிழ்ச்சியாக, இணக்கமாக, ஒற்றுமையுடன் வாழும் இந்த குடும்பத்தை பார்த்து பலரும் வியக்கின்றனர்.

இந்த குடும்பம் இப்படியென்றால் ஒரு ஊரே ஒரு கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறது ஹூபெய் மாநிலத்தில்.

உயர்கல்வியாளர் குக்கிராமம்

ஹூபெய் மாநிலத்தின் ஷியான்னிங்குல் உள்ள ஒரு தொலைதூர குக்கிராமம் முனைவர்கள் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. ஹெஷெங்ச்சியாவ் என்ற சிறிய நகரிலுள்ள லிஷோ கிராமம் உண்மையிலேயே குக்கிராமம் தான். காரணம் இந்த ஊரில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையே 20தான். ஆனால் இந்த 20 குடும்பங்களிலும் பல்கலைக்கழக பட்டதாரிகள் உண்டு. 1949ம் ஆண்டு முதல் இதுவரையான காலத்தில் இந்த 20 குடும்பங்கள் கொண்ட குக்கிராமத்தில் 10 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 20 பேர் பல்கலைக்கழகங்களில் பட்டதாரிகளாக்கியுள்ளனர். கல்வியின் முக்கியத்துவத்தையும், மாண்மையும் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சொல்லி வளப்பதே இந்த உயர் கல்வி பயின்றவர் கிராமமாக தங்கள் குக்கிராமம் மாறக் காரணம் எனிகிறார்கள் இந்த லீஷோ கிராமவாசிகள்.

அடுத்த தகவலும் ஒரு புள்ளிவிபரக் குறிப்புதான்.

சின்ச்சியாங்கில் மூத்தவர்கள்

சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழும் 100 வயதை தாண்டிய மூத்த பெருமக்களின் எண்ணிக்கை 1200க்கு மேலாம். வடமேற்குச் சீனாவில் அமைந்தது சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம். உய்கூர், கசாக் உள்ளிட்ட பல இனத்தோர் வாழும் இந்த தன்னாட்ச்ப் பிரதேசத்தில் இப்போது மொத்தம் 1211 சதம் தாண்டிய மூத்தோர் இருப்பதாக உள்ளூர் மூத்தோர் பெருமக்களுக்கான கமிட்டி கூறியுள்ளது. 1987ம் ஆண்டில் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் 865 பேர் 100 வயதை கடந்தவர்களாக பதிவாகியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் இவ்வெண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இது மட்டுமல்ல 100 வயதை கடந்தவர்கள் 1211 பேர் என்றால், 80 வயதை தாண்டிய மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 592. தேநீர், சோளத்தால் செய்யப்பட்ட ரொட்டி, காஷ்கொட்டை, உள்ளூர் ஆப்ரிகாட் பழங்கள் எல்லாம் சேர்ந்த இந்த மக்களின் உணவு பழக்கமே இந்த நீடுவாழ் வாழ்க்கையின் ரகசியமாக இருக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. உணவே மருந்து என்று சொன்னது பொய்யாகிவிடுமா என்ன?

உணவை பற்றி குறிப்பிட்டதால் மரபணு விந்தையில் உணவு தட்டுப்பாட்டையும், உடை பிரச்சனையையும் தீர்க்கலாம் என்று கூறும் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் பற்றியும் சொல்லவேண்டும்.