• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-13 15:06:12    
புகழ்பெற்ற பாடகி Cheng Fangyuan

cri
கடந்த நூற்றாண்டின் 1980ஆம் ஆண்டுகளில் பாடல் துறையில் நுழைந்த Cheng Fangyuan, 10 தனிநபர் ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார். பல திரைப்படங்களுக்காகவும் தொலைக்காட்சித் தொடர்களுக்காகவும் அவர் இடைப் பாடல்களைப் பாடியுள்ளார். அமெரிக்கா, மெக்சிகோ, Zimbabwe, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் ஆகிய நாடுகளில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய அவர், பரவலான வரவேற்பைப் பெற்றார். சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும், நிழற்படம் எடுக்கவும் விரும்பிய Cheng Fangyuan கட்டுரை எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் பல முறை வெளியிடப்பட்டன.

1960ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் பெய்ஜிங்கில் பிறந்த Cheng Fangyuan, குழந்தை பருவத்திலிருந்து இசை மீது பேரார்வம் கொண்டுள்ளார். துவக்கப் பள்ளியின் போது, அவர் உறவுக்கார பெண்கள் சிலருடன் Er Hu என்ற சீன நாட்டுப்புற இசைக் கருவியை வாங்கினார். இசைக் கருவியை இசைக்க கற்றுக் கொள்வது, பொறுமைக்கான சோதனையாகும். படிப்படியாக, Cheng Fangyuan மட்டும் இடைவிடாமல் பயிற்சி செய்தார். சிறப்புத் துறை ஆலோசனை இல்லாத நிலையில், சொந்த முயற்சியோடு, அவர் 17வது வயதில் மத்திய இசைக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, Er Hu துறையில் கல்வி பயில துவங்கினார். Cheng Fangyuan நினைவுப்படுத்திக் கூறியதாவது—
"இசை மீதான பேரார்வமே, அப்போது எனது முயற்சிகளுக்கான காரணமாகும். என்னுடைய மிக மலிவான Er Hu 6 யுவான் மட்டுமே. அந்த Er Huவை தொடக்கமாக கொண்டு இசைக்க பயிற்சி செய்து வந்தேன். அப்போது எனக்கு கற்றுக் கொடுக்க யாரும் இல்லை. பள்ளியின் அரங்கேற்ற குழுவில் Er Huவை இசைக்கும் சக மாணவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பின்னர் சிறப்புத் துறையில் Er Huவை இசைக்க கற்றுக் கொண்டேன்" என்று அவர் கூறினார்.
இசைக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற பின், அப்போதைய மத்திய இசைக் குழுவில் Cheng Fangyuan சேர்ந்து, இசைக் கலைஞராக வேலை செய்தார். அப்போது சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை சீனாவில் நடைமுறைக்கு வந்தது. உள்நாட்டுக்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றம் அதிகரித்தது. சீனாவில் பரவலாக வரவேற்கப்பட்ட வெளிநாட்டுப் பாடல்கள், Cheng Fangyuanனின் இசைப் பாதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

"ஹாங்காங் மற்றும் தைவான் பாடல்களையும், வெளிநாடுகளின் country இசை எனும் ஒரு வித நாட்டுப்புற இசையையும் கேட்டு களித்தோம். உலகில் இவ்வாறு அருமையான இசை இருக்கிறது என பாராட்டினோம். குறிப்பாக தைவானைச் சேர்ந்த Deng Lijunனின் பாடல்களைக் கேட்ட போது, வியந்து பாராட்டினோம். நானும் பாட வேண்டும் என கருதினேன். பின்னர் நான் பாடல் பாடினேன். மற்றவரைப் போல பாடல் பாடுவதில் நானும் தேர்ச்சி பெற்றவள் என எனது சக மாணவர்களும் ஆசிரியர்களும் கருதினர்" என்று Cheng Fangyuan கூறினார்.
இசைப் பாதையில் Cheng Fangyuan தடையின்றி நடந்து சென்றார். அப்போது அவர் அழைப்பின் பேரில், தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்காக பாடல் பாடினார். மக்களின் பாராட்டைப் பெற்ற பின், அவர் இசைக் குழுவுடன் சேர்ந்து சீனாவின் சில மாநிலங்களிலும் நகரங்களிலும் அரங்கேற்றினார். அரங்கேற்றத்தில் வெற்றி பெற்ற Cheng Fangyuan கீழைப் பாடல் மற்றும் நடனக் குழுவில் சேர்ந்து தனிப் பாடகியாக மாறினார். வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளை வழங்கிய கலைக் குழுவில், அவர் புடம் போட்டெடுக்கப்பட்டு பல அனுபவங்களை சேகரித்தார். இந்தக் காலத்தில் தனிநபர் பாடல் ஒலிநாடாக்களை அவர் வெளியிட்டார். குறிப்பாக, குழந்தைப் பருவம் என்ற தைவானின் pop இசைப் பாடலை மீண்டும் பாடுவதன் மூலம் வரவேற்கப்பட்ட 10 பாடல்களுக்கான பரிசை அவர் வென்றெடுத்தார்.
இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது Cheng Fangyuan பாடிய குழந்தைப் பருவம் என்ற பாடலாகும். விடுமுறையை எதிர்பார்த்து, நாளையை எதிர்பார்த்து, வயதானவராக இருப்பதை எதிர்பார்க்கும் குழந்தைப் பருவம் என்று இப்பாடல் ஒலிக்கிறது.
1995ஆம் ஆண்டு Cheng Fangyuan அமெரிக்காவில் கல்வி பயின்றார். நியூயார்க் நகரில் எல்லா இடங்களிலும் இசையும் கலையும் இருக்கிறது என்று அவர் உணர்ந்தார். நியூயார்க்கில் வாழ்ந்த ஓராண்டு காலத்தில், இசை நாடகத்தை அவர் நேசிக்கத் தொடங்கினார். நாடு திரும்பிய பின், broadway இசை நாடகமான இசையின் ஒலியை அவர் சீனாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
1 2