• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-13 15:42:26    
சீனாவில் நடைபெறும் உலக குழிப்பந்து போட்டி1

cri
 
உலக கோல்ப் என்ற குழிப்பந்து விளையாட்டு போட்டிகளில் ஒன்றான HSBC குழிப்பந்து சாம்பியன் பட்டப் போட்டி 5ம் நாள் சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஷாங்காய் மாநகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. உலக குழிப்பந்து போட்டி ஒன்று ஆசியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதன் பரிசுத்தொகை 70 இலட்சம் அமெரிக்க டாலரை எட்டியது.

உலக குழிப்பந்து விளையாட்டின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள அமெரிக்க வீரர் Tiger Woods உள்ளிட்ட உலக புகழ் பெற்ற வீரர்கள் பலர் இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். உலக குழிப்பந்து விளையாட்டின் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள Phil Mickelson எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, கூறியதாவது.
HSBC குழிப்பந்து சாம்பியன் பட்டப் போட்டி உலக குழிப்பந்து போட்டியாக மாறிய பின், உள்ளார்ந்த ஆற்றல் வாய்ந்த சீன சந்தைக்கு மேலதிக உலக முதல் நிலை வீரர்கள் வருவர். குழிப்பந்து போட்டி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில்

சேர்வதுடனும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் குழிப்பந்து போட்டியிலும் சீனா கவனம் செலுத்துவதுடனும், உலக குழிப்பந்து போட்டியான HSBC குழிப்பந்து சாம்பியன் பட்டப் போட்டி, சீனா உள்ளிட்ட ஆசிய பிரதேசங்களில் குழிப்பந்து விளையாட்டின் வளர்ச்சியை தூண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குழிப்பந்து விளையாட்டுப் போட்டியை பொறுத்த வரை, 2009ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. 2016ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குழிப்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக சேர்ப்பதென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அக்டோபர் 9ம் நாள், டென்மார்க்கில், முடிவு செய்தது. நூற்றுக்கு அதிகமான ஆண்டுகளுக்கு பின், குழுப்பந்து போட்டி ஒலிம்பிக்

விளையாட்டுப் போட்டியில் மீண்டும் சோர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்ட பிறகு, முதல் உயர் நிலை சர்வதேச போட்டியாக நடைபெறும். உலக குழிப்பந்து போட்டியான HSBC குழிப்பந்து சாம்பியன் பட்டப் போட்டி, முழு உலக குழிப்பந்து விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் Cui Dalin எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது, இவ்வாறு தெரிவித்தார்.