இவ்வாண்டின் முதல் 10 திங்களில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட சீன மற்றும் வெளிநாடுகளின் பயணிகளின் எண்ணிக்கை 52லட்சித்து70ஆயிரத்தைத் தாண்டியது. சுற்றுலா வாரியத்திலிருந்து கிடைத்த மொத்தம் வருமானம் 440கோடிக்கு மேலாகும். இவ்விரு இலக்குகள் திபெத் சுற்றுலா வரலாற்றில் புதிய பதிவுகளாகியுள்ளன என்று இப்பிரதேசத்தின் சுற்றுலா வாரியத்திலிருந்து கிடைத்த தகவல் தெரிவித்தது.
2008ம் ஆண்டின் இறுதி முதல் இவ்வாண்டின் துவக்கம் வரை, திபெத் சுற்றுலா துறையின் வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான "மீட்சி நடவடிக்கைகள்"மேற்கொள்ளப்பட்டன. குளிர்காலச் சுற்றுலா எனும் திட்டம், முக்கிய சுற்றுலா பாதைகளில் 50விழுக்காட்டு கட்டணக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், திபெத் சுற்றுலாத் துறை அதன் தாழ்ந்த நிலையிலிருந்து விரைவாக விடுபட்டதோடு, அதிகரிப்பின் மீட்சியையும் நனவாக்கியது என்று தெரிகிறது.
|