13ம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் மற்றும் வணிகத் தலைவர்களின் உச்சி மாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னேற்றுவது பற்றி, ஹு சிந்தாவ் தனது உரையில் 4 முன்மொழிவுகளை வழங்கினார்.
தற்போது உலகப் பொருளாதாரம் நிதானமடைந்து மேலும் அதிகரிக்கும் அறிகுறி காணப்பட்டுள்ள போதிலும், இதற்கு உறுதியான அடிப்படை இல்லை. எனவே, உலகப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கும் வகையிலும், பல்வேறு உறுப்பு நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை பயன்தரும் முறையில் தீர்க்க வேண்டும் என்று ஹு சிந்தாவ் வலியுறுத்தினார்.
ஆசிய பசிபிக் தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள் சீன ஆக்கப்பணி மற்றும் வளர்ச்சிப் போக்கில் பங்கேற்பதை வரவேற்பதாகவும், உலகப் பொருளாதாரத்தின் பன்முக மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு அவர்கள் ஆக்கப்பூர்வ பங்காற்ற வேண்டும் என்றும் ஹு சிந்தாவ் விருப்பம் தெரிவித்தார்.
|