சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹுசிந்தாவும் சீனக் கோ மின் தாங் கட்சியின் கெளரவத் தலைவர் Lien Chanனும் 14ம் நாள் சிங்கப்பூரில் சந்தித்துப்பேசினர். இரு கட்சிகளும் இரு கரைகளும் பரிமாற்றத்தையும் பேச்சுவார்த்தையையும் வலுப்படுத்தி, அரசியலில் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, இரு கரைகளின் புதிய வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற வேண்டும் என்று இச்சந்திப்பில் ஹுசிந்தாவ் விருப்பம் தெரிவித்தார்.
இரு கரை உறவின் வளர்ச்சியில் Lien Chan கவனம் செலுத்துகிற, அதனை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுகின்ற செயல்பாடுகளை ஹுசிந்தாவ் பாராட்டினார். அண்மையில், இரு கரைகளின் உறவு, முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. இரு கரை உடன்பிறப்புகளின் பொது நலன்களுக்கும் விருப்பங்களுக்கும் இது பொருந்தியுள்ளது. சர்வதேசச் சமூகத்தின் பொது வரவேற்பையும் உறுதியையும் இது பெற்றுள்ளது என்று ஹுசிந்தாவ் சுட்டிக்காட்டினார். ஹுசிந்தாவின் கருத்துக்களை Lien Chan ஆதரித்து பேசினார். கடந்த ஆண்டு முதல், இரு கரை உறவு தொடர்ந்து நிதானமாக முன்னேறி, மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெற்றுள்ளது.
|