• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-14 20:03:16    
APEC தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம்

cri
ஆசிய-பிசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 17வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 14ம் நாள் சிங்கப்பூரில் துவங்கியது. சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்தல், உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி, பிரதேச ஒருமைப்பாடு உள்ளிட்ட பல உடனடி பிரச்சினைகளைப் பற்றி பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதித்தனர்.

சீன அரசுத்தலைவர் ஹுசிந்தாவ், பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையை ஆதரிப்பது பற்றி சிறப்பு உரை நிகழ்த்தினார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாசாவ்சு, ஹுசிந்தாவின் உரையை அறிமுகப்படுத்தினார். சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்து, உலகப்பொருளாதாரத்தின் பன்முக மறுமலர்ச்சியை விரைவுபடுத்த, பலவேறு தரப்புகளும், வர்த்தக பாதுகாப்புவாதத்தை உறுதியாக எதிர்க்க வேண்டும். வர்த்தக தடைகளைக் குறைத்து அல்லது நீக்கி, பேச்சுவார்த்தை மூலம் வர்த்தக சர்ச்சைகளைத் தீர்த்து, உலகப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு சீரான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று ஹுசிந்தாவ் குறிப்பிட்டார். இது பற்றிய, சீனாவின் நிலையான செயல்பாடுகளையும், எதிர்கால நடவடிக்கைகளையும் ஹுசிந்தாவ் தமது உரையில் விளக்கிக்கூறினார்.

சீனா, வர்த்தக மற்றும் முதலீடின் தாராளமயமாக்கத்தையும், இவற்றுக்கான வசதிகளை அதிகரிப்பதையும் சீனா உறுதியாக ஆதரிக்கின்றது. நேர்மையான நியாயமான பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையை உருவாக்க சீனா எப்பொழுதும் முயற்சி செய்வதோடு, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு வருகிறது என்று ஹுசிந்தாவ் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு, ஆசிய-பிசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவாகும். கடந்த 20 ஆண்டுகால வளர்ச்சியில், இவ்வமைப்பு ஆக்கப்பூர்வ பங்காற்றிய போதிலும், புதிய அறைகூவல்களை எதிர்நோக்குகிறது. எனவே, இவ்வமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கு ஹுசிந்தாவ், தமது உரையில் மூன்று முன்மொழிவுகளை வழகினார். ஆசிய-பிசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு, தமது தனிச்சிறப்பியல்புகளைப் பயன்படுத்தி, வர்த்தக மற்றும் முதலீட்டை தாராளமயமாக்கவும், இவற்றுக்கான வசதிகளை அதிகரிப்பதில், முன்னேற்றப் போக்கையும் தொடர்ந்து விரைவுபடுத்த வேண்டும். அதேவேளை, பொருளாதாரத் தொழில் நுட்பத்தின் ஒத்துழைப்பு மேலும் பெரிய சாதனைகளைப் பெற, இவ்வமைப்பின் ஒதுக்கீட்டை பெருக்க வேண்டும். தவிர, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை மேற்கொண்டு, சொந்த அமைப்பு முறையின் தெம்பு ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று ஹுசிந்தாவ் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் தொடர்புடைய வாரியங்களும் தொழில் நிறுவனங்களும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தொழில் நுட்ப ஒத்துழைப்பில் பங்கெடுப்பதை ஊக்குவித்து ஆதரிக்கும் வகையில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பு நிதியத்திற்கு சீன அரசு, ஒரு கோடி அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்யும் என்றும் ஹுசிந்தாவ் தமது உரையின் போது அறிவித்தார்.