பசிபி பொருங்கடல் சுற்றியுள்ள நாடான அமெரிக்கா எதிர்கால வளர்ச்சியில், ஆசியாவிலிருந்து விலக முடியாது. ஆசிய விவகாரங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. ஜப்பானில் பயணம் மேற்கொள்கின்ற அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 14ம் நாள் இவ்வாறு கூறினார்.
சீனாவின் உயர்வேக வளர்ச்சி முழு உலக வளர்ச்சிக்கு துணைபுரியும். இரு தரப்பின் வளர்ச்சிக்கு சீன-அமெரிக்க ஒத்துழைப்பு துணைபுரியும். உலகில், சீனா மேலும் பெரும் பங்காற்ற வேண்டுமென அமெரிக்கா விரும்புகின்றது என்று ஒபாமா தெரிவித்தார்.
தவிர, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பிரச்சினை, உலக புவி வெப்பமேறல், அணு ஆயுத பரவல் தடுப்பு ஆகியவை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒபாமா விளக்கி கூறினார்.
|