• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-15 17:38:37    
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவின் உரை

cri

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 17வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 15ம் நாள் சிங்கப்பூரில் முடிவடைந்தது. பல்வேறு தரப்புகளின் பொது முயற்சிகளுடன், உலக பொருளாதார மறுமலர்ச்சி போக்கை வலுப்படுத்தி, உலக பொருளாதாரத்தின் சமமான முறையான வளர்ச்சியைத் தூண்ட வேண்டும். அத்துடன், சீனா, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, முயற்சிகளை மேற்கொண்டு, அறைகூவல்களை சமாளிக்க வேண்டுமென்று சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 17வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் 2 அம்சங்கள் இடம் பெற்றன. 14ம் நாள் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில், பிரதேச தொடர்பை நெருக்கமாக்குவது குறித்து, இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறினர். 15ம் நாள் நடைபெற்ற 2வது கூட்டத்தில், தொடரவல்ல அதிகரிப்பை முன்னேற்றுவது குறித்து அவர்கள் விவாதித்தனர். ஓராண்டுக்கு முன், சர்வதேச நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பில், பல்வேறு வடிவிலான வர்த்தக மற்றும் முதலீ்ட்டு பாதுகாப்புவாதங்களை எதிர்த்து, இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பன்முக மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள லிமா உச்சி மாநாட்டில் அனைவரும் உறுதி கூறினர். இன்று, உலக பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருகின்ற வேலையில், ஆசிய-பசிபிக் பிரதேசங்களில், பல்வகை வர்த்தக மற்றும் முதலீ்ட்டு பாதுகாப்புவாத நடவடிக்கைகள் தோன்றுகின்றன. முதலாவது நாள் கூட்டத்தில், பல தரப்புகளின் வர்த்தக அமைப்பு முறை குறித்து சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் சிறப்பு உரை நிகழ்ந்தினார். சர்வதேச வர்த்தக திறப்பு அளவை உயர்த்தி, வர்த்தக பாதுகாப்புவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 2வது நாள் கூட்டத்தில், மறுமலர்ச்சி போக்கை வலுப்படுத்துவது, உலக பொருளாதார சமமான முறையான வளர்ச்சியை தூண்டுவது ஆகியவற்றுக்கு ஹுசிந்தாவ் ஆலோசனை கூறினார்.

சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பு, காலநிலை மாற்றம், உணவு தானிய பாதுகாப்பு ஆகிய உலக பிரச்சினைகள் ஆசிய-பசிபிக் பிரதேசம் உள்பட உலக பொருளாதாரத்தின் பன்முக வளர்ச்சிக்கும், நீண்டகால வளர்ச்சிக்கும் கடுமையான அறைகூவல்களை வழங்கும். தற்போது, திறப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறுகின்ற கருத்துக்களை அடிப்படையாக கொள்ள வேண்டும். மேலும் உலக பொருளாதார வளர்ச்சி போக்கை வலுப்படுத்தி, உலக பொருளாதாரத்தின் சமமான முறையான வளர்ச்சியை தூண்ட கூட்டாக பாடுபட வேண்டும். எனவே, உலக பொருளாதாரத்தின் பன்முக வளர்ச்சியை தூண்டுவது, தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது, விட்டுகொடுத்து சகிப்பு தன்மை அதிகரிப்பை முன்னேற்றுவது, சமநிலை அதிகரிப்பை தூண்டுவது ஆகிய 4 கருத்துக்களை ஹுசிந்தாவ் முன்வைத்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையை நிலைநிறுத்தி, மேலதிக பயன்மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, நியாயமான மற்றும் தாராளமயமான முழு உலக வர்த்தக முதலீட்டு அமைப்பு முறையை பேணிக்காக்க வேண்டும் என்று ஹுசிந்தாவ் விருப்பம் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் ஒத்துழைப்பில் பங்கெடுக்கும் மனப்பாங்கில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது என்று ஹுசிந்தாவ் கூறினார். அமைதி, திறப்பு மற்றும் ஒத்துழைப்பின் வளர்ச்சியை சீனா நாடி வருகின்றது. இது தொடர்பான அமைதி, பொது வளர்ச்சி, இணக்கமான உலகு ஆகியவற்றை தூண்டுவதில் சளையாது பாடுபடவும் சீனா விரும்புகின்றது என்று ஹுசிந்தாவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.