சர்வதேச சமூகத்துடன் இணைந்து, சீனா அறைகூவல்களை கூட்டாக சமாளித்து, தொடரவல்ல மற்றும் சமநிலையான பொருளாதார அதிகரிப்பை கண்டறிய பாடுபட வேண்டும். பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையின் சீரான வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து, காலநிலை மாற்றத்தை கூட்டாக சமாளித்து, பிரதேச பொருளாதார ஒருமைப்பாட்டுப் போக்கை ஆக்கப்பூர்வமாக தூண்டி, மரபுசாராத பாதுகாப்பு அச்சுறுத்தலை கூட்டாக சமாளிக்க வேண்டும். சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 15ம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின் 17வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தின் 2வது நாள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
பல்வேறு நாடுகள் பயன்மிக்க நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். நுகர்வை முன்னேற்றுவது, உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் அவை முயற்சிகளை மேற்கொண்டு, நியாயமான மற்றும் தாராள திறப்பில் உலக வர்த்தக முதலீட்டு அமைப்பு முறையை பேணிக்காத்து, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை மீண்டும் தூண்ட வேண்டும் என்று ஹுசிந்தாவ் கூறினார்.
|