• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-16 17:15:05    
பாலஸ்தீனத்தின் ஒரு சார்பு திட்டம்

cri
சுதந்திர பாலஸ்தீன நாட்டை நிறுவுவது பற்றிய திட்டத்தை பாலஸ்தீனத்தின் தலைமைப்பீடம், 15ம் நாள், ஒரு சார்பாக அறிவித்தது. ஆனால், இத்திட்டத்திற்கு இஸ்ரேல் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

1967ம் ஆண்டு, 3வது மத்தியக் கிழக்குப் பிரதேசப் போருக்கு முன்பான எல்லைக் கோட்டின் அடிப்படையில், ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரை, காசாப் பிரதேசம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கு, பாலஸ்தீனம், ஐ.நாவின் ஒப்புதலை எதிர்பார்க்கிறது என்று பாலஸ்தீனத்தின் தலைமைப் பேச்சுவார்த்தைப் பிரதிநிதி Saeb Erekat 15ம் நாள் கூறினார். இது, பாலஸ்தீனம் முதல்முறையாக முன்வைக்கும் திட்டமல்ல. தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை, தேக்க நிலையில் சிக்கியுள்ளது. பாலஸ்தீனம், அதனைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கும் சர்வதேசச் சமூகத்துக்கும் நிர்ப்பந்தம் திணிக்க முயல்கிறது. இதன் விளைவாக, இவ்வமைதிப் பேச்சுவார்த்தையை முன்னேற்ற முடியும் என்று மத்தியக் கிழக்குப் பிரதேசப் பிரச்சினை பற்றிய சீன நிபுணர் Li Guofu சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீன நாட்டை நிறுவுவது பற்றி, பாலஸ்தீனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து, விவாதம் நடத்தியுள்ளது. மேலும், பாலஸ்தீனத தேசிய அதிகார நிறுவனத்தின் தலைவர் மஹ்முத் அப்பாஸ், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், ரஷியா, மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் பரிமாற்றம் செய்துள்ளார் என்று Saeb Erekat தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினை, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் விரும்புகிறது. எனவே, பாலஸ்தீனத்தின் ஒருசார்பு திட்டம், இப்பிரதேசத்தின் நிதானத்தை பாதிக்கும் என்று Li Guofu கருத்து தெரிவித்தார்.

சுதந்திர பாலஸ்தீன நாட்டை நிறுவ, பாலஸ்தீனம் சர்வதேசச் சமூகத்தின் ஆதரவை நாடுகின்றது. இருப்பினும், அமைதியான வழிமுறையில் பேச்சுவார்த்தை மூலம், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் விரும்புகின்றது. ஒருசார்புத் திட்டத்துக்கு ஆதரவு கிடைப்பது அரிது என்றார் அவர்.

பாலஸ்தீனத்தின் திட்டம் குறித்து, இஸ்ரேலிய தலைமையமைச்சர் Benjamin Netaniyahu 15ம் நாள் பேசுகையில், பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி முன்னேற்றப் போக்கு பற்றிய பிரச்சினையில், பாலஸ்தீனம் ஒருசார்பாக எந்தத் திட்டத்தை மேற்கொண்டாலும், இஸ்ரேல் உரிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.