• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-16 10:28:19    
ஹூசிந்தவாவின் பயணம் பெற்ற சாதனைகள்

cri
நவம்பர் 10 முதல் 15ம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தவ் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 17வது அதிகாரபூர்வமற்ற  கூட்டத்தில் ஹூசிந்தாவ் கலந்து கொண்டார். இப்பயணம் அதிக சாதனைகளைப் பெற்றது என்று ஹூசிந்தாவுடன் சென்ற சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியெச்சு இப்பயணம் முடிந்த போது கூறினார்.
6 நாட்களில், ஹூசிந்தாவ் 30க்கு மேலான இரு தரப்பு மற்றும் பல தரப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். அவர், மலேசியா மற்றும் சிங்கப்பூர் தலைவர்களை சந்தித்துரையாடி பல்வேறு துறையினரை சந்தித்தார். ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் ஹூசிந்தாவ் முக்கிய உரை நிகழ்த்தினார். அது, பல்வேறு செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது, உலக பொருளாதார நிலையில், நிதானமாக மறுமலர்ச்சி பெறுவதில் சீரான போக்கு தோன்றியுள்ளது. ஆனால், பன்முகங்களிலும் மறுமலர்ச்சி பெறவில்லை. பல்வகை வர்த்தக மற்றும் முதலீட்டு பாதுகாப்புவாத நடவடிக்கைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. நிதி நெருக்கடிக்குப் பின் ஆசிய-பசிபிக் பிரதேச மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சி மீது, பொதுவாக பல்வேறு தரப்புகள் கவனம் செலுத்துகின்றன. இப்பயணத்தின் போது, சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்கின்ற கொள்கைகளையும் அவை பெறும் பயன்களையும் ஹூசிந்தாவ் விரிவாக அறிமுகப்படுத்தினார்.
பொருளாதாரத்தின் தொடர்ந்த வளர்ச்சியை முன்னேற்றுவது, இந்த ஏபெக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு தரப்புகள், திறப்பு, ஒத்துழைப்பு, ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது, கூட்டு வெற்றி ஆகிய கருத்துக்களை அடிப்படையாக கொள்ள வேண்டும். கூட்டாக பாடுபட்டு, உலகப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி போக்கை வலுபடுத்தி, அதன் சமமான முறையான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டுமென ஹூசிந்தாவ் கருத்து தெரிவித்தார்.
பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, பல தரப்பட்ட வர்த்தக முறைமைக்கு ஆதரவளிக்கின்ற சீனாவின் நிலைப்பாட்டை அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் தமது உரையில் விளக்கி கூறினார். தோஹா சுற்று பேச்சுவார்த்தை, விட்டுச் சென்ற பிரச்சினைகளைத் தீர்த்து கூடியவிரைவில் பன்முக, அனைத்து தரப்பினரும் ஒத்துக்கொள்கின்ற முடிவை பெற்று வளர்ச்சி இலக்கை நனவாக்க வேண்டும். என்று ஹூசிந்தாவ் வலியுறுத்தியதாக யாங் சியெச்சு தெரிவித்தார்.
எவ்வகையிலான பாதுகாப்புவாதத்தையும் எதிர்த்து பல தரப்பட்ட வர்த்தக முறைமைக்கு ஆதரவளிக்க பல்வேறு உறுப்பு நாடுகள் ஒரு மனதாக தெரிவித்துள்ளன.
மலேசியா, சிங்கப்பூர், ஆசியான் ஆகியவற்றுடனான உறவை முன்னேற்றுவது, சர்வதேச நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம் முதலிய உலகளவிலான அறைகூவல்களைக் கூட்டாக சமாளிப்பது, இவ்வமைப்பின் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்றுவது முதலியவற்றில், ஹூசிந்தாவின் இப்பயணம் முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தும் என்று யாங் சியெச்சு தெரிவித்தார்.