• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-16 15:40:35    
சீனாவின் மேற்கு பகுதி வளர்ச்சி உத்திநோக்கு பெற்ற சாதனைகள்

cri

சீனாவின் மேற்குப் பகுதி, பரந்த நிலப்பரப்பு, அதிக மக்கள் தொகை, நிறைந்த மூலவளம் முதலியவற்றைக் கொண்டதாகும். ஆனால், வரலாற்றில் இப்பிரதேசத்தின் வளர்ச்சி பின்தாங்கிய நிலையில் இருந்தது. சீனாவின் பல்வேறு பிரதேசங்களுக்கிடை சம வளர்ச்சியை நனவாக்க, வழிகாட்டல், சலுகை கொள்கை, நிதி ஒதுக்கீடு முதலிய வழிகளில் மேற்கு பகுதிக்கான ஆதரவை அதிகரிக்க சீன அரசு 10 ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த உத்தி மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் இது பற்றி கூறுகிறோம்.

சுங்சிங், சிச்சுவான், குயிஷோ, யுன்னான், திபெத், சின்ச்சியாங் முதலிய 12 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்கள், மேற்குப் பகுதியின் வளர்ச்சிக் கொள்கையில் அடங்குகின்றன. அவற்றின் நிலப்பரப்பு, 68 இலட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இது, சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 71.4 விழுக்காடு வகிக்கிறது.

இந்த கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், சீன அரசு மொத்தம் 3 இலட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. மேற்குப் பகுதியில் சுமார் 9 இலட்சம் கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. சிங்காய்-திபெத் இருப்புப் பாதை, இயற்கை எரிவாயுவை மேற்கிலிருந்து கிழக்கிற்கு அனுப்பும் குழாய், முதலிய திட்டப்பணிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டுள்ளன. முக்கிய நீர் சேமிப்பு, எரியாற்றல், தகவல் தொடர்பு முதலியவற்றின் கட்டுமானங்கள் பன்முகங்களிலும் முன்னேறின. தவிர, இப்பிரதேசங்களின் கல்வி, மருத்துவ சிகிச்சை, பண்பாடு, வேலைவாய்ப்பு, சமூக உத்தரவாதம் முதலிய துறைகள் பன்முகங்களிலும் வளர்ந்துள்ளன. கிராமப்புற வறிய மக்கள் தொகை, 95 இலட்சத்து 40 ஆயிரமாக குறைந்தது. உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்பட்டுள்ளது.

2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை மேற்குப் பகுதியின் மொத்த உற்பத்தி மதிப்பு, 1 இலட்சத்து 60 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 5 இலட்சத்து 82 ஆயிரம் கோடி யுவானுக்கு அதிகரித்தது. ஆண்டு அதிகரிப்பு விகிதம் 11.7 விழுக்காடாகும். அண்மையில் நடைபெற்ற 10வது சீன மேற்குப் பகுதி சர்வதேச கண்காட்சியில், இக்கொள்கை பெற்ற சாதனைகளை சீன தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் வெகுவாக பாராட்டினார்.

1 2