அமெரிக்காவைச் சேர்ந்த 430க்கு அதிகமான இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளின் தலைவர்களும் கல்வி துறை அதிகாரிகளும் சீனாவில் பயணம் மேற்கொண்டனர். ஒரு வார காலத்தில் அவர்கள் சீனாவின் பல இடங்களில் பயணம் மேற்கொண்டு, உள்ளூர் இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளுடன் கூட்டாளியுறவை நிறுவினர். மேலும், மொழி, பண்பாடு முதலிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது பற்றி அமெரிக்கப் பிரதிநிதிக் குழுவுக்கும் சீன தரப்புக்கும் இடையில் பல ஒத்த கருத்துக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீன மொழி பாலம்- அமெரிக்க இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளி தலைவர்களின் சீனப் பயணம் என்ற திட்டத்துக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீன மொழி பாலம் என்ற திட்டப்பணி 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது. சீனக் கன்பிஃசியெஸ் தலைமை கழகமும், அமெரி்க்க இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் பரந்த செல்வாக்குடைய அமெரிக்க கல்லூரி வாரியமும் கூட்டாக இதனை ஏற்பாடு செய்தன. இதுவரை மொழி பண்பாட்டின் கட்டுக்கோப்புக்குள் இரு நாடுகள் மேற்கொள்ளும் மிகப் பெரிய அளவிலான கல்வி பரிமாற்றத் திட்டப்பணி இதுவாகும். கடந்த 4 ஆண்டுகளில், சுமார் 2000 அமெரிக்க இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளி தலைவர்களும், கல்வி நிர்வாகிகளும் கல்வி துறை அதிகாரிகளும் சீனாவுக்கு வந்த பயணம் மேற்கொண்டனர். சீனாவில் நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாய் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் நேரில் கண்டு, சீனாவின் பள்ளி வாழ்க்கையை பரந்த அளவில் அனுபவித்தனர். தவிர, அதிக சீன மற்றும் அமெரிக்க பள்ளிகளுக்கிடையிலான நட்புறவையும் அவர்கள் விரைவுப்படுத்தினர்.
அமெரிக்க கல்லூரி வாரியத்தின் தலைவர் GastonCaperton கூறியதாவது
அமெரிக்க பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு சீனாவில் பயணம் மேற்கொள்ளும் அனுபவம் இல்லை. சீனா பற்றிய சில தகவல்களை மட்டும் அவர்கள் படித்தனர். சீனப் பயணம் மூலம், அவர்கள் சீனாவின் பொது மக்களையும் ஆசிரியர்களையும் அறிந்து கொண்டு குடியிருப்புப் பிரதேசங்களுக்குள் நுழைந்து உணரலாம். முன்பு கருத்தில் இருந்ததை விட ஒரு வித்தியாசமான சீனா பற்றி அவர்கள் அறிந்து கொள்ளலாம். சீன மொழி மற்றும் பண்பாட்டைக் கற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தையும் அவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
சீனக் கன்பிஃசியெஸ் தலைமை கழகத்தின் தலைமை இயக்குநர் xu lin அம்மையார், அமெரிக்க கல்லூரி வாரியத்தின் தலைவர் GastonCapertonஉடன், 2009ம் ஆண்டுக்கான இரு தரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். சீனக் கன்பிஃசியெஸ் தலைமை கழகத்தின் அதிகாரி guo li fang கூறியதாவது
இவ்வாண்டின் உடன்படிக்கை முன்பு இருந்த ஒத்துழைப்பு கனிகளின் தொடராகும். அமெரிக்காவின் இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் சீன மொழி கல்வியை மேலும் அதிகரிக்க இரு தரப்புகளும் முயற்சி மேற்கொள்ளும். அவற்றுக்கு மேலதிக சீன மொழி கல்வி தன்னார்வ தொண்டர்கள் அனுப்பப்படும். அமெரிக்காவுக்கு சீன மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மொழி பண்பாடு பற்றிய ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அமெரிக்கப் பிரதிநிதிக் குழு கலந்து கொண்டது. பிறகு, ஹெய் லுங்ச்சியாங், ஹெ பெய், ஹு பெய் முதலிய மாநிலங்களில் இது பயணம் மேற்கொண்டது. அமெரிக்க Minnesota நகரின் Clear water நடுநிலை பள்ளியின் தலைவர் பீடர் குஸ்தாப்சன் கூறியதாவது
எங்கள் பள்ளியில் சீன மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அடுத்த ஆண்டு சீன மொழி பாடத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
2006ம் ஆண்டு முதல், இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் சீன மொழி, அரபு மொழி, ரஷிய மொழி, ஹிந்தி மொழி, பொஸ்னியன் மொழி ஆகிய 5 அந்நிய மொழி பாடங்களை அமெரிக்கா பரப்பியது. தற்போது, அமெரிக்காவில் சுமார் 4000 இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளிகளில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் சீன மொழியைக் கற்கின்றனர். அமெரிக்காவில் மிக விரைவாக வளரும் வெளிநாட்டு மொழில் கல்வியாக சீன மொழி கல்வி மாறியுள்ளது. ஆனால், இத்துறையில் பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, சீன மொழி ஆசிரியர் குறைவு, கல்வி வழிமுறை பற்றாக்குறை, அமெரிக்க மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய பாட நூல் குறைவு முதலியவை அவற்றில் அடங்கும்.
அமெரிக்க Berryessa Union School District, California வின் உறுப்பினர் chen feng ling அம்மையார் கூறியதாவது
ஹு பெய் மாநிலத்துக்குச் செல்வோம். அங்குள்ள பள்ளிகளின் கல்வி நிலைமை, பாடம் நிலைமை மற்றும் வசதிகளைப் பார்வையிடுவோம். அடுத்தக் கட்டத்தில், அவற்றுடன் நெருக்கமான தொடர்பு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு சில நடைமுறையாக்கத்துக்கேற்ற பாடங்களை வகுக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
சீனக் கன்பிஃசியெஸ் தலைமை கழகத்தின் அதிகாரி guo li fang கூறியதாவது
மேலும் அதிகமான ஆசிரியர்களை அனுப்புவோம். இவ்வாண்டின் இறுதிக்குள், அமெரிக்காவிலான சீன மொழி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கை 300ஐ எட்டும். மறுபுறம், பல்வேறு கன்பிஃசியெஸ் கழகங்கள் திட்டப்படி, பல்வேறு இடங்களில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளும்.
இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள், சீன அரசவை உறுப்பினர் லியு யேன் துங் அம்மையார் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட போது, ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது, அமெரிக்காவின் சீன மொழி கல்வி இலட்சியத்தை ஆதரித்து, இரு நாட்டு பண்பாட்டு பரிமாற்றத்தை முன்னேற்றும் வகையில், சீனா 3 திட்டப்பணிகளை மேற்கொள்ளும். ஒன்று, ஆண்டுதோறும், அமெரிக்க கன்பிஃசியெஸ் கழகத்தின் 800 ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு சீன அரசு புலமைப் பரிசு வழங்கும். இரண்டு, ஆண்டுதோறும் 800 அமெரிக்க பல்கலைக்கழக மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு இலவச கோடைக்கால சீனப் பயண வாய்ப்பை வழங்கும். மூன்று, சீனாவில் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் 800 அமெரிக்க இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளின் தலைவர்களு அழைப்பு விடும்.
|