• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 14:45:23    
ஒலிபரப்பு மற்றும் இணையச் சீர்திருத்த ஆய்வு

cri
கலை........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கிளீடஸ்......இந்த முறை நான் விருந்தினராக கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கெடுப்பது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

கலை.....கிளீடஸ் மகிழ்ச்சியடைவதுடன் உங்களுடன் ஒத்துழைப்பது இது முதல் முறையல்ல. ஆனால் 46 ஆண்டுகளாக நடைமுறைபடுத்தப்பட்ட தமிழ் ஒலிபரப்பு சீர்த்திருத்தம் பற்றி நாங்கள் முக்கியமாக விவாதிப்பது முதல் முறையாகும்.

கிளீடஸ்......ஆமாம். ஏற்கனவே ஆகஸ்ட் 27ம் நாள் முதல் ஒலிபரப்புச் சீர்திருத்தம் பற்றி வானொலி மூல அறிவிப்பு வடிவத்தில் நேயர் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை.....ஆமாம். அறிவிப்பு என்ற குறுகிய வடிவத்தில் சீர்திருத்தம் பற்றி தெளிவாக விளக்க முடியாது. நாங்கள் இந்த நிகழ்ச்சியை வாய்ப்பாக பயன்படுத்தி இப்போது மேற்கொண்டிருக்கின்ற ஒலிபரப்பு மற்றும் இணைய சீர்திருத்தம் பற்றி நன்றாக விளக்கிக் கூற வேண்டும்.

கிளீடஸ்......மகிழ்ச்சி. முதலில் ஒலிபரப்பின் சீர்திருத்தம் பற்றி விளக்கக் கூறி நிகழ்ச்சியை துவக்கலாம். ஒரு வாரம் நடைமுறையில் உள்ள சீர்த்திருத்தத்தில் ஒலிபரப்பபட்ட நிகழ்ச்சி வடிவம் எப்படி?

கலை.....முந்தைய ஒலிபரப்பு வடிவக் கோட்பாட்டை மாற்றி செய்திகளையும் செய்தித் தொகுப்பையும் இணைத்து உருவாக்கிய செய்திப் பகுதி நாங்கள் மேற்கொண்டிருக்கின்ற சீர்திருத்தத்தில் முக்கிய காலடியாகும்.

கிளீடஸ்......ஆமாம். புதிய வடிவத்தில் ஒலிபரப்பபடுகின்ற செய்திகளில் முக்கிய செய்திகள் குறித்து உடனே ஆழமாகவும் விரிவான முறையிலும் விளக்கம் வழங்கப்படும். செவிமடுப்பதற்கு மேலும் நேரடி கண்ணோட்டத்தை நண்பர்களுக்கு வழங்கும் மேம்பாடு இதற்கு உண்டு.

கலை.....இந்த வடிவத்தின் மூலம் விளக்கிக் கூறப்படும் செய்தி மற்றும் அது தொடர்பான செய்தித் தொகுப்பு கூடியளவில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது எங்கள் நடப்பு சீர்த்திருத்தத்தின் நோக்கமாகும்.

கிளீடஸ்......நடப்பு சீர்திருத்தத்தில் செய்தியை செய்தித் தொகுப்புடன் இணைக்கும் முயற்சி தவிர, வேறுபட்ட மாற்றம் மேலும் காணப்படுமா?

கலை.....கண்டிப்பாக. சீன இசை சீனப் பாடல்கள் ஆகியவற்றை கூடுதலாக ஒலிபரப்புமாறு பல முறை நேயர்கள் கோரியிருந்தனர். ஆனால் நேரம் பற்றாக்குறை என்ற காரணமாக இசை மற்றும் பாடல்களை ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வில்லை.

கிளீடஸ்......இது நமது ஒலிபரப்பில் நிலவிய வருத்தம் தான்.

கலை.....ஆமாம். இதை நான் ஒப்புக் கொண்டுள்ளேன். ஆகவே இந்த முறை சிறப்பு நிகழ்ச்சிப் பகுதிகளில் இசை சீன பாடல் அல்லது வெளிநாட்டு பாடல்களை நாள்தோறும் 5 நிமிடம் நிகழ்ச்சியில் சேர்த்துள்ளோம். இது நடப்புச் சீர்திருத்தத்தின் தனிச்சிறப்பியல்பாகும்.

கிளீடஸ்......ஆகவே சீர்திருத்தத்தின் துவக்கத்தில் புதிய வடிவத்தில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை செவிமடுத்து எங்களுக்கு தாராளமாக கருத்து தெரிவியுங்கள்.

.........................இசை............

கலை..... அடுத்து தமிழ் இணைய தளத்திலும் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். இணைய தளத்தின் முதல் பக்கத்தில் உங்களுக்கு வழிகாட்டும் சொற்கள் அதிகமாக காணப்படும். எழுத்துக்களுடன் இணையும் ஒலிப் பகுதிகள் அதிகரிக்கும்.

கிளீடஸ்......முக்கிய செய்திப் பகுதியில் நிழற்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அன்றைய முக்கிய செய்திகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தொடர்ந்து அறிவிக்கப்படும் வடிவத்தில் முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்கும் வைக்கப்படும்.

கலை.....முதல் பக்கத்தின் மேற்பகுதியில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்களின் தனிப்பட்ட தகவல் அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு பற்றி தமிழ்ப் பிரிவின் பணியாளர் எழுதிய விளக்கத்தை படிக்க வசதி வழங்கப்படும்.

கிளீடஸ்......சீர்திருத்தத்திலுள்ள செய்திப் பகுதியில் ஏற்கனவேயுள்ள சீனச் செய்திகள் சர்வதேசச் செய்திகள் ஆகியவை தவிர இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளின் செய்திகள் அதிகரிக்கப்படும். உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை சீர்திருத்தப்பட்ட இணைய தளத்தில் செய்திகளை தேர்வு செய்வதன் மூலம் நிறைவேற்றலாம். தேர்வு செய்யும் நேரமும் குறையலாம்.

கலை.....நேயர்களுக்கு சேவைபுரியும் நிகழ்ச்சிகளான நட்புப் பாலம், உங்கள் குரல், நேருக்கு நேர் ஆகிய நிகழ்ச்சிகள் புதிய இணையதளத்தில் இடம் பெறும். அவற்றுக்கேற்ப ஒலியும் இணைக்கப்படும்.

கிளீடஸ்......தவிரவும், மக்கள் செவிமடுக்க விரும்பும் இசைப் பகுதி இந்த இணைய தளத்தில் சேர்க்கப்படும்.

கலை.....இந்த புதிய இணையதளத்தின் முக்கிய மாற்றம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

கிளீடஸ்......கண்டிப்பாக தெரியும்.

கலை.....இது பற்றி சொல்லுங்கள்.

கிளீடஸ்......இணையதளத்தின் முதல் பக்கத்தின் கீழ் பகுதியில் இணையதள ஒலி வசதி பொருத்தப்படுகின்றது. இந்த பகுதியில் 5 பிரிவுகள் உள்ளன. வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் ஒலி அனைத்தும் எழுத்துக்களுடன் இணைக்கப்படுகின்றது.

கலை.....ஆகவே இனிமேல் பணி நேரத்தில் சரியாக ஒலிபரப்பை கேட்க முடியாத நிலையில் இணையதளத்தில் நுழைந்து கட்டுரையை படித்த வண்ணம் ஒலியை கேட்கலாம்.

கிளீடஸ்......ஆகவே எந்நேரத்திலும் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளத்தின் மூலம் கேட்கலாம். இந்த தனிச்சிறப்பு தவிர, இணையதளத்தில் வேறென்ன அம்சங்கள் அதிகரிக்கும்?

கலை.....வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி இனிமேல் இணையதளத்தில் ஒலிபரப்பப்படும்.

கிளீடஸ்......ஆகவே எங்கள் தமிழ் இணையதளம் இணையதள ஒலிபரப்பாக மாறும். முந்தைய இணைய அம்சங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அம்சங்கள் குறையவில்லை.

கலை.....ஆனால் பிரிவுகளின் எண்ணிக்கை குறையும். ஒலி அதிகரிக்கும். கேட்க தக்கத் தன்மை அதிகரிக்கும். பயன்படுத்தும் தன்மை மேலும் எளிதானது. தெளிவானது.

கிளீடஸ்......அப்படியிருந்தால் சீர்திருத்தப்பட்ட இணைய தளம் எப்போது துவக்கப்படும்?

கலை.....இப்போது சோதனை முறையில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பில் உள்ளன. புதிய இணையதள பரவல் பக்குவமடையும் சூழ் நிலையில் சோதனை முறையில் இணையப் பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

கிளீடஸ்......இது நவ சீனாவின் வைர விழாவின் கொண்டாட்ட அம்சங்களில் ஒன்றாகும்.

கலை.....நீங்கள் இப்படி கருதுவதற்கு நான் ஆமோதிப்பை தெரிவிக்கிறேன்.

கிளீடஸ்......நேயர் நண்பர்களே ஒலிபரப்பு மற்றும் இணையத் சீர்திருத்த எண்ணத்தை விபரமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

கலை.....சோதனை முறையிலுள்ள ஒலிபரப்பை கேட்டு உங்கள் கருத்து தெரிவியுங்கள். வெளியிடப்படும் இணையதள அம்சங்களை படித்த பின் உங்கள் கருத்தை விரிவாக எழுதி அனுப்புங்கள்.

கிளீடஸ்......நிகழ்ச்சியை கேட்டதற்கு மிக்க நன்றி. அடுத்த வாரம் இந்நிகழ்ச்சியை மீண்டும் ஒலிபரப்பபடும். கேட்க தவறாதீர்கள்.