உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் வடக்கு எல்லையில் உள்ளது. விரிவான புல்வெளிகளை கொண்ட இப்பிரதேசத்தில் 49 தேசிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தின் தலைநகர் Huhhot நகரில், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, கூட்டாக வாழ்கின்றனர்.
மக்கள் வசிக்கும் சூழலை மேம்படுத்துவதற்காக, 2003ம் ஆண்டுக்குப் பின், Huhhot நகரம், 14 இலட்சம் பரப்பளவு ஆபத்தான மற்றும் பழைய உறைவிடங்களையும், பழைய குடியிருப்புப் பகுதிகளையும் நீக்கியுள்ளது. அவற்றின் பரப்பளவு, பழைய நகரத்தின் மொத்த கட்டிட நிலப்பரப்பின் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது. முழு நகரிலும், புதிதாகக் கட்டியமைத்த நகரப் பிரதேசத்தின் பரப்பளவு, 2003ம் ஆண்டில் இருந்ததை விட ஒரு மடங்கு அதிகம். மங்கோலியா, ஹான், ஹுய், மான் உள்ளிட்ட 36 தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள், விரைவாக வளர்ந்து வரும் இந்த நகரில் இணக்கமாக வாழ்கின்றனர்.
73வது வயதான ஹான் இன மூதாட்டி Li Guiying அம்மையார், இந்நகரில் 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகின்றார். அவரின் அனுபவங்கள், இங்குள்ள வாழ்க்கை மாற்றங்களுக்கான சான்றுகளாகும். அவர் கூறியதாவது,
1957ம் ஆண்டு, நான், கணவருடன், ஷான்சி மாநிலத்திலிருந்து இங்கு வந்தேன். அப்போது, இங்கு, மரங்களைத் தவிர கட்டிடங்கள் ஒன்றுமில்லை. கடந்த 20க்கு மேற்பட்ட ஆண்டுகளில், அடிப்படை வசதிகள் எல்லாம் உருவாக்கி கட்டியமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகள், முன்பு இருந்ததை விட மென்மேலும் நன்றாக மாறியுள்ளன என்று Li Guiying அம்மையார் கூறினார்.
6 ஆண்டுகளுக்கு முன், இந்நகரத்தில் 50 மீட்டருக்கு மேல் உயரமுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை, 30ஐ கூட எட்டவில்லை. இப்போது, இவ்வெண்ணிக்கை, 500ஐத் தாண்டியுள்ளது. தற்போது, இந்நகரத்தின் பாதை பரந்து கிடக்க, அதிக உயரமான கட்டிடங்கள் நிற்கின்றன.
தற்போது, அவரது மகன் மற்றும் மகள் ஏன் பேரனும் கூட பணி புரிந்து கொண்டுள்ளனர் என்று Li Guiying அம்மையார் கூறினார். அவர், தனது கணவருடன், 75 சதுர மீட்டர் அளவு வீட்டில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் முழுமையான ஓய்வு மானிய உதவியைப் பெறுகின்றனர். அவர்களது உணவு மற்றும் உடை நிறைவேற்றப்படுகின்றன. நாள்தோறும், இரவு உணவுக்குப் பின், அவர், அண்டைவீட்டுக்காரர்களுடன், குடியிருப்புப் பகுதியிலுள்ள பூங்காவில் கூட்டாகப் பாடல் பாடி மகிழ்கிறார்.
Huhhot நகரத்துக்கு வந்த போது, நாங்கள் இருவர் மட்டுமே. தற்போது, எமது குடும்பத்தினரின் எண்ணிக்கை, 19 ஆகும். நாங்கள் இன்பமாக வாழ்கிறோம் என்று Li Guiying அம்மையார் கூறினார்.
நகரவாசிகளின் வாழ்க்கை மேலும் செழுமையாக மாறுவதற்காக, தொழில் நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்றவரின் மானிய உதவியை இந்நகர அரசு, 6 முறை உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்களின் வருமானத்தை 4 முறை அதிகரித்துள்ளது. இந்நகரக் குடிமக்களின் மருத்துவச் சிகிச்சைக் காப்புறுதி, வேலையின்மைக் காப்புறுதி உள்ளிட்ட சமூகக் காப்பீட்டு முறைமையை அடிப்படையில் கட்டியமைத்துள்ளது.
Huhhot, பல தேசிய இன மக்கள் செறிந்து வாழும் நகரமாக இருப்பதால், அது வளரும் போக்கில், பல்வேறு தேசிய இனங்களின் பண்பாட்டுக்கான மதிப்பு, பாதுகாப்பு மற்றும் பரப்புரையில் உள்ளூர் அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், Zhao Jun அருங்காட்சியகம், இளவரசி வசிப்பிடம் முதலிய புகழ்பெற்ற பண்பாட்டு வரலாற்று காட்சித்தலங்கள், செப்பனிடப்பட்டு, விரிவாக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பாதை, மங்கோலிய பண்பாட்டுத் தனிச்சிறப்பு வாய்ந்த பண்பாட்டுப் பாதை முதலியவை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன.
இங்குள்ள தேசிய இனங்களுக்கிடை ஒற்றுமை, இணக்கத்தின் வெளிப்பாடாகும். மங்கோலிய இனத்தோர், புல்வெளியைப் போன்ற பரந்த மனப்பான்மையை கொண்டவர்கள். வேறு எந்த பண்பாடு மற்றும் இனத்தோரை அவர்கள் புறக்கணிப்பதில்லை என்று Huhhot நகராட்சி கட்சி கமிட்டியின் செயலாளர் Han Zhiran அறிமுகப்படுத்தினார்.
இங்கு தேசிய இனங்கள் ஒற்றுமையாகவும் ஒருங்கிணைப்புடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பது வரலாற்றுப் புத்தக்கங்களில் காணப்படலாம். 6 பெரிய மதப்பிரிவுகள் இங்கு கூட்டாக நிலவுகின்றன. கத்தோலிக்க மதம், புத்த மதம், இஸ்லாமிய மதம் முதலியவற்றின் நம்பிக்கையாளர்கள், கூட்டாக வாழ்ந்து வருகின்றனர் என்று Han Zhiran கூறினார்.
Huhhot நகர அரசு, கல்வித்துறையில் மிக அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், சில பள்ளிகளின் கட்டுமானம் மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளது. வேறு இடங்களிலிருந்து வந்தவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்வது உள்ளிட்ட பல பிரச்சினைகள் அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளன.
Huhhot நகரத்திற்கு, ஏன் முழு உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்திற்கு, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், சிறுபான்மைத் தேசிய இனங்களின் வளர்ச்சி நிதி, வளர்ச்சி குறைந்த பிரதேசங்களின் வளர்ச்சி முதலியவற்றுக்காக அரசுகளின் தொடர்புடைய வாரியங்கள், சிறப்பு நிதியை வழங்கியுள்ளன. சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆயிரக்கணக்கான பொருளாதாரம், கல்வி, பண்பாடு, சுகாதாரம் முதலியவற்றிலான திட்டப்பணிகளுக்கு உதவி செய்துள்ளன. சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள் வறுமையிலிருந்து விடுபடவும் உதவியுள்ளன. உள் மங்கோலியச் சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியார் Hao Chengzhi கூறியதாவது,
இங்குள்ள தேசிய இனங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து, மேலும் இன்பமான எதிர்காலத்தைக் கூட்டாக வரவேற்கின்றனர். இங்கு காணப்படும் தலைசிறந்த மக்களுக்கிடை உறவு, தேசிய இனங்களுக்கிடை உறவு, இணக்கமான சமூகம் ஆகியவற்றால், இங்குள்ள முதலீட்டுச் சூழலும் சிறப்பாக மாறி வருகிறது என்று பேராசிரியார் Hao Chengzhi கூறினார்.
|