• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-17 14:53:12    
உலக உணவுத் தானிய பாதுகாப்பு

cri

உலக உணவுத் தானிய பாதுகாப்பு பற்றிய உச்சி மாநாடு 16ம் நாள் இத்தாலியின் தலைநகர் ரோமில் துவங்கியது. சீனத் துணை தலைமையமைச்சர் ஹுய்லியாங்யூ துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

உலக உணவு தானிய பாதுகாப்பைப் பேணிக்காக்க, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டாக முயற்சிகளை மேற்கொள்வது என்ற தலைப்பிலான உரை நிகழ்த்தினார். உணவு தானிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நிதானத்துக்கான அடிப்படையாகவும், நாட்டின் தற்சார்ப்பு மற்றும் உலக அமைதியின் முக்கிய முன்னிபந்தனையாகவும் இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து, ஹுய்லியாங்யூ நான்கு முன்மொழிவுகளை முன்வைத்தார்.

ஒதுக்கீட்டை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியை உயர்த்த வேண்டும். ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வளர்ச்சியடைந்து சீரான சந்தை சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, உலகளவில் கட்டுப்பாட்டு அமைப்பு முறையை மேம்படுத்த வேண்டும், பன்முக சமமான வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்தால் வேளாண் உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் பாதிப்புகளில், பல்வேறு நாடுகளும் கவனம் செலுத்தி, நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் பற்றிய கொபென்ஹகன் மாநாட்டில் ஆக்கப்பூர்வ சாதனைகள் பெறுவதை கூட்டாக தூண்ட வேண்டும் என்றும் ஹுய்லியாங்யூ வலியுறுத்தினார்.

நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளாக, சீன அரசு எப்பொழுதும் வேளாண் துறை மற்றும் உணவு தானிய பாதுகாப்பு பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் சீனாவின் வேளாண் துறையிலும் கிராமப்புற வளர்ச்சியிலும் மாபெரும் சாதனைகள் காணப்பட்டன. உலக உணவு தானிய பாதுகாப்பில், சீனா பங்காற்றி வருகிறது.

வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடுகையில், சீனா, இயன்ற அளவில் இதர வளரும் நாடுகளுக்கு உதவியளித்து வருகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, பசிபிக் முதலிய பிரதேசங்களின் சுமார் 100 நாடுகளில், சீனா, வேளாண் தொழில் நுட்ப மாதிரி மையங்களையும், சோதனை நிலையங்களையும் நிறுவி, இந்த நாடுகளின் ஏராளமான தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு பயற்சியளித்துள்ளது. அவர் கூறியதாவது:

சீனா, பல்வேறு நாடுகளுடன் உணவு தானிய மற்றும் வேளாண் வளர்ச்சி துறைகளில் தொடர்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தும். சர்வதேச உணவு தானிய மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவைத் தொடர்ந்து அதிகரிக்கும். சீனா, சர்வதேச சமூகத்துடன் இணைந்து, உலக உணவு தானிய பாதுகாப்பைக் கூட்டாக பேணிக்காத்து, நீண்டகால அமைதி மற்றும் கூட்டுச் செழுமை கொண்ட இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள, சீனா விரும்புவதாக, ஹுய்லியாங்யூ தெரிவித்தார்.