• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-17 17:40:34    
அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்கும் சீன-அமெரிக்க கூட்டாளியுறவு

cri

சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் 17ம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை முழு உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பின், சீன-அமெரிக்கக் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. உத்தி நோக்குடைய இருதரப்பு நம்பிக்கையை நிறுவி ஆழமாக்கி, ஆக்கப்பூர்வமான பன்முக இரு நாட்டு ஒத்துழைப்புறவை நிறுவ இரு நாடுகளும் கூட்டாக பாடுபடும் என்று அறிக்கை வலியுறுத்தியது. மேலும் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, உலகின் அமைதி, நிதானம், செழுமை ஆகியவற்றுக்காக இரு நாடுகளும் பயன் தரும் நடவடிக்கை மூலம் கூட்டாக முயற்சி செய்யும் என்று அறிக்கை கூறியது.

பேச்சுவார்த்தைக்குப் பின், இரு தலைவர்களும் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் கூறியதாவது

அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன் சிறப்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன். இரு தரப்புறவு, பொது அக்கறை கொண்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, பரந்தளவில் பொது கருத்துக்களை உருவாக்கினோம் என்று அவர் கூறினார்.

இரு நாட்டுறவு பற்றி பேசுகையில், புதிய நிலைமையில் மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் பற்றி இரு நாடுகளும் பரந்த பொது நலன்களையும் அதிக வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுள்ளன என்று ஹு சிந்தாவ் கருத்து தெரிவித்தார்.

இரு நாட்டுறவு பற்றி பராக் ஒபாமா கூறியதாவது

காலநிலை மாற்றம், அணு ஆயுத பரவல், பொருளாதார மீட்சி உள்ளிட்ட 21ம் நூற்றாண்டிலான அறைகூவல்கள், எமது 2 நாடுகளுடனும் தொடர்புடையவை. எந்த ஒரு தனி நாடும் ஒரு சார்பாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சினைகளைத் தீர்க்க இயலாது. இது தான் நானும் அரசுத் தலைவர் ஹு சிந்தாவும் இணைந்து இரு நாடுகளுக்கிடையில் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு மற்றும் பன்முக உறவை நிறுவுவது பற்றி விவாதிப்பதற்கான காரணமாகும் என்று ஒபாமா கூறினார்.

இதற்காக, அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு, விண்வெளி பயணம் முதலிய துறைகளில் கலந்தாய்வையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இரு தரப்புகளும் இசைந்துள்ளன. மேலும் சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்தல், சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பைப் பேணிக்காத்தல், கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய 6 தரப்புப் பேச்சுவார்த்தையை முன்னேற்றுதல், காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல் முதலிய பிரச்சினைகள் பற்றி இரு தரப்புகளும் விவாதித்தன. ஒரே சீனா என்ற கொள்கையில் அமெரிக்கா தொடர்ந்து ஊன்றி நிற்கும் என்று பராக் ஒபாமா மீண்டும் வலியுறுத்தினார்.