சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ், சீனாவில் பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன், 17ம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் இதில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன.
முதல்முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவுடன், 17ம் நாள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, பொது அம்சாங்களை கண்டறிந்து கருத்து வேற்றுமைகளை ஒதுக்கிவைத்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இரு நாடுகளின் விருப்பத்தை இருவரும் கூட்டாக அறிவித்தனர். சீன-அமெரிக்க கூட்டறிக்கையில், இரு நாட்டுறவு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட 5 துறைகளில், இரு நாடுகளின் பொது கருத்துக்கள், உறவு வளர்ச்சி, ஒத்துழைப்பின் நோக்கம் ஆகியவை விளக்கி கூறப்படுகிறது. சிங்கப்பூரின் மிக பெரிய சீன மொழி ஏடான lianhe zaobao, 18ம் நாள் இவ்வாறு வெளியிட்டது.
போர்ச்சுக்கல், பல்கேரியா, கியூபா, பிரேசில் முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்களும், இப்பேச்சுவார்த்தை பற்றி, அதிகமான செய்திகளை வெளியிட்டுள்ளன.
|