• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-18 10:56:31    
சீன-அமெரிக்க கூட்டறிக்கை

cri

அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபமா சீன பயணம் மேற்கொண்டுள்ள போது, இவ்விரு நாடுகளும் 17ம் நாள் பெய்ஜிங்கில் சீன-அமெரிக்க கூட்டறிக்கையை வெளியிட்டது. இரு தரப்புறவு மற்றும் பொது ஆர்வம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் ஆழமாகவும் விரிவாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகள் தூதாண்மை உறவை நிறுவிய கடந்த 30 ஆண்டுகளாக இரு நாட்டுறவு பெற்ற வளர்ச்சியை அவர்கள் வெகுவாக பாராட்டினர். இரு நாடுகள் உலகத்தையும் எதிர்காலத்தையும் எதிர்நோக்கும் உத்திநோக்கு மற்றும் ஒற்றுக்கொன்று நலன் தரும் உறவை நிறுவ துவங்கியுள்ளன என்று இந்த கூட்டறிக்கை வெளியீடு காட்டுகிறது. சீனாவின் தற்கால சர்வதேச உறவு ஆய்வகத்தின் ஆய்வாளர் yang mingjie இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டறிக்கையை, சீன-அமெரிக்க உறவு பற்றிய 4வது கூட்டறிக்கையாக கருத்தலாம். இது, பாரம்பரிய இரு தரப்புறவையும் தாண்டியது. தற்போது எதிர்நோக்குகின்ற பிரச்சினை தவிர, எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரம் அரசியல் பாதுகாப்பு முதலிய பிரச்சினைகளை தீர்ப்பது பற்றிய அம்சங்கள் இக்கூட்டறிக்கையில் அடங்குகின்றன என்று அவர் கூறினார்.


ஒரு வலிமையான செழுமையான வெற்றிகரமான சர்வதேச விவகாரத்தில் மேலும் பெரிய பங்காற்ற சீனாவை, அமெரிக்கா வரவேற்கிறது என்று சீன-அமெரிக்க கூட்டறிக்கை தெரிவிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னரும் செயல்படக்கூடிய இரு நாட்டுறவின் உத்திநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிதானமான பொது கருத்துக்களை இரு நாடுகளும் ஏற்படுத்தியுள்ளன என்று இவ்வறிக்கையில் வரிகள் காட்டுகின்றன என்று yang jieming கூறினார்.
இரு தரப்புகளும், பயனுள்ள நடவடிக்கையை மேற்கொண்டு பொது அறைகூவல்களை சமாளிக்கின்ற கூட்டாளியுறவை நிதானமாக உருவாக்கும் என்றும் இக்கூட்டறிக்கை வலியுறுத்துகிறது. இது, சீன-அமெரிக்க உறவில் புதிய கருத்தாகும். yang jieming கூறியதாவது,

இரு தரப்புகளும் கூட்டாக எதிர்நோக்குகின்ற அறைகூவல்கள் மேன்மேலும் அதிகமாகியுள்ளன. இது, இந்த நிலையான உத்திநோக்கு மற்றும் ஒன்றுக்கொன்று நலன் தரும் உறவினால் ஏற்பட்டவையாகும் என்று அவர் கூறினார்.


காலநிலை மாற்றம், எரியாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சீன-அமெரிக்க கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்களாகும். இக்கூட்டறிக்கையில், தூய்மையான எரியாற்றல் உள்ளிட்ட தொழில்களில் விரிவான ஒத்துழைப்பு திட்டங்களையும் இரு தரப்புகளும் இக்கூட்டறிக்கையில் முன்வைத்துள்ளன. எரியாற்றல் மற்றும் சுற்றுச்சூழலில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு, சாதாரண பொருளாதார ஒத்துழைப்புகளை தாண்டியது. அது, உலகின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை பொருத்தவரை, மாதிரி முக்கியத்துவம் வாய்ந்தது என்று yang mingjie தெரிவித்தார்.