• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-18 14:47:28    
சீனாவில் நடைபெறும் உலக குழிப்பந்து போட்டி 2

cri
2016 மற்றும் 2020ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குழிப்பந்து போட்டி சேர்க்கப்பட்டுள்ளது, உலக மற்றும் சீன குழிப்பந்து விளையாட்டின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், சீன குழிப்பந்து விளையாட்டின் நிலையை உயர்த்துவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

1984ம் ஆண்டு முதல் நவீனமயமான குழிப்பந்து விளையாட்டு திடல் சீனாவில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில், சீன குழிப்பந்து விளையாட்டு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சீன குழிப்பந்து விளையாட்டு சீனாவில் முன்பு பணக்காரர்கள் விளையாடி வந்த குழிப்பந்து விளையாட்டு சாதாரண மக்களஇன் விளையாட்டாக படிப்படியாக மாறியுள்ளது என்று ஷாங்காய் யு சாங் சர்வதேச குழிப்பந்து விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குநர் Zhang Youcai கருத்துத் தெரவித்தார்.
சீனாவில், பொது மக்களின் விளையாட்டாக குழிப்பந்து விளையாட்டு படிப்படியாக மாறி வருகின்றது. மேலதிக மக்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு, கவனம் செலுத்த வேண்டும். இது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

2010ம் ஆண்டு, ஷாங்காய் உலக பொருட்காட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு துணைபுரியும் வகையில், இந்த போட்டி ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ளது.
16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு 2009ம் ஆண்டு நவம்பர் 12ம் நாளோடு இன்னும் ஓராண்டு காலமுள்ளது. 16வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகிறன. இன்று இந்த ஓராண்டுக்கு முந்தைய நாளை முன்னிட்டு குவாங் சோவில் பல கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெற்றன.
11 முதல், 13ம் நாள் வரை, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் பிரதிநிதிக் குழுக்கள் கூட்டம் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் குழுக்களின் தலைவர்கள் அல்லது பரதிநிதிகள் குவாங் சோவுக்கு வந்து, 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் உற்சாகத்தை

முன்னதாகவே உணர்ந்து கொண்டதாக கூறினார். 2011ம் ஆண்டு கசகஸ்தானின் Alma-ataவில் குளிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டி, 2012ம் ஆண்டு சீனாவின் ஷான் துங் மாநிலத்தின் ஹெய் யாங்கில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி, 2014ம் ஆண்டு தென் கொரியாவின் INCHEONவில் ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றின் ஏற்பாட்டு குழுக்களின் பிரதிநிதிகள் பார்வையாளர் என்ற முறையில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தவிர, சீன மற்றும் வெளிநாட்டு புகழ் பெற்ற வீரர்கள் இந்த போட்டியின் முக்கிய பணியாளர்களை அழைப்பதற்கு குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டு குழு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. தற்போது, சீன மற்றும் வெளிநாடுகளின் 12 புகழ் பெற்ற வீரர்கள் இந்த பணிகளில் பங்கெடுக்கின்றனர்.