• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-18 16:31:00    
உலக நாணயத் துறையில் கண்காணிப்பையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்துவது

cri

ஆசிய வளர்ச்சி வங்கி உலக நிதி நெருக்கடி மற்றும் வருவாய் கொணரா செத்துக்களின் நிர்வாகம் பற்றிய மாநாட்டை நவம்பர் 18ம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. சர்வதேச நிதி நெருக்கடி, நாணயம் மீதான கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் துறையிலான பற்றாக்குறையை வெளிப்படுத்தியது.

பொருளாதார இன்னலைச் சமாளித்து புதிய நெருக்கடி நிகழாமல் தவிர்க்கும் வகையில், நாணயக் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் துறையில் சீர்திருத்தத்தையும் சர்வதேச ஒத்துழைப்பையும் தற்போது தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று இம்மாநாட்டில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவில் தொடங்கிய நிதி நெருக்கடி முழு உலகப் பொருளாதாரத்துக்கும் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் மாபெரும் தொகை மதிப்புள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால், இந்தப் போக்கு, வங்கி தொகுதிக்குப் புதிய நிர்பந்தங்களைத் திணித்தது. அதேவேளையில், கூடுதலான நாணய புழக்கம், பண வீக்க அளவை அதிகரித்துள்ளது. தற்போதைய சிக்கலான நாணய நிலைமையில், வங்கிகள் மீதான கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் துறையிலான சீர்திருத்தத்தை சீனா மேலும் வலுப்படுத்தும் என்று சீன வங்கிக் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவர் CAI E SHENG கூறினார்.

நாணயத் துறையில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அபாயத்தைச் சமாளிக்கும் ஆற்றலை உயர்த்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் கிழக்காசியப் பிரிவின் தலைவர் KLAUS GERHAEUSSER கூறினார்.இந்த நிதி நெருக்கடி மூலம், உத்தி நோக்கு பிரச்சினைகளை பற்றி யோசிக்க வேண்டும். குறிப்பாக, நாணய துறையில் கண்காணிப்பையும் நிர்வாகத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

நிதி நெருக்கடியால் ஏற்பட்ட உலகளாவில் பொருளாதாரப் பிரச்சினையைத் தனி ஒரு நாட்டின் ஆற்றலால் தீர்க்க முடியாது. அதை போல், உலக நாணயக் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் துறையை சீர்திருத்தி மேம்படுத்துவதற்கு, பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று இம்மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியின் நிதி நிதான ஆணையத்தின் துணைத் தலைவர் sun ping கூறியதாவதுதற்போது, 20 நாடுகள் குழு, நாணய நிதான செயற்குழு, பாசல் வங்கி கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் நாடுகளும் சர்வதேச நாணய துறையை சீர்திருத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி பரந்தளவில் விவாதித்து வருகின்றன. சீனாவும் இதில் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டு வருகின்றது உலக நிதி நெருக்கடியைச் சமாளிக்க சீனா இயன்ற அளவில் செயல்பட்டு பங்காற்ற விரும்புகின்றது என்று அவர் கூறினார்.