• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-19 14:40:13    
மோ குடும்பத்தின் பண்ணைத் தோட்டம் 1

cri

சீனாவின் சான்தூங் மாநிலத்தில் சுற்றுலா மூலவளம் எழில் மிக்கது. இங்கு அழகான இயற்கைக் காட்சிகளும் மானுடவியல் சார் காட்சித்தலங்களும் அதிகமாக காணப்படலாம். புகழ்பெற்ற சுற்றுலா நகரமான யன்தேயைச் சேர்ந்த சிசியா மாவட்டம் இதில் குறிப்பிடத்தக்கது. சீனாவில் புகழ் பெற்ற ஆப்பிள் விளையும் இடமான சிசியா, உள்ளூர் தனிச்சிறப்பியல்பு மிக்க நாட்டுப்புற பாணியுடையது. இன்றைய நிகழ்ச்சியில், சிசியாவிலுள்ள மோ

குடும்பத்தின் பண்ணைத் தோட்டத்தின் கட்டிட்டங்களைப் பார்க்க வாருங்கள்.
மோ குடும்பத்தின் பண்ணைத் தோட்டம், சிசியா மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. சிங் வம்ச காலம் முதல் கடந்த நூற்றாண்டின் 30ம் ஆண்டுகள் வரை, இது கட்டியமைக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பு, 20 ஆயிரம் சதுர மீட்டரைத் தாண்டுகிறது. சுமார் 480க்கு மேலான அறைகளும் கட்டிடங்களும் இங்கு உள்ளன. இப்பண்ணைத் தோட்டத்தின் கட்டமைப்பும் வடிவமைப்பும், பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகத்துக்கு ஒத்தாய் விளங்குகிறது. எனவே, சீனாவின் நாட்டுப்புற சிறிய அரண்மனையாக இது அழைக்கப்படுகிறது.

சிசியா நகரம், நாட்டின் உள் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், மலைகளும் கற்களும் மிகவும் அதிகம். இதனால், பல்வகை கற்களை மூலப்பொருட்களாக, கட்டிடக் கலைஞர்கள் போதியளவில் பயன்படுத்தினர். கற்சிலைகள் மோ குடும்பத்தின் பண்ணைத் தோட்டத்தில் குறிப்பிடத்தக்க கட்டிடக் கலையின் தனிச்சிறப்பாக மாறியுள்ளன. இத்தோட்டத்தின் கதவின் இருப்பக்கங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரண்டு கல் முரசுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. சிற்ப கலைஞர்கள் 4 பேர், மூன்று ஆண்டுகாலம் செலவிட்டு, இவற்றை செதுக்கினர். தலா 1.5 மீட்டர் உயரமும், சுமார் ஒரு டன் எடையுமுடைய இக்கல் முரசுகளில், சீனாவின் பாரம்பரிய படங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மோ குடும்பத்தின் பண்ணைத் தோட்டத்திலுள்ள, ஒவ்வொரு சாதாரண கல்லையும் தொழிலாளர்கள் சிறப்பாக கலை அம்சத்தோடு பயன்படுத்தினர். இதில் ஏராளமான நிதியும் உழைப்பாற்றலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீன நாட்டுப்புற பண்பாட்டுச் சங்கத்தின் உறுப்பினர் சுசியேளபின் அம்மையார் இது பற்றிய ஒரு சிறிய கதையைக் கூறினார்.
நீங்கள் பார்க்கின்ற இந்தச் சுவர், இத்தோட்டத்தில் புகழ்பெற்ற தோ கூ சுவராகும். தோ என்பது, சீனாவின் பண்டைய கால எடை அளவு. ஒரு தோ என்றால், சுமார் 15 கிலோகிராம். சீன மொழியில், கூ என்றால், அரிசி என்று பொருளாகும். எனவே, அச்சுவரில் பயன்பட்டுள்ள ஒவ்வொரு கல்லையும் செதுக்க, சுமார் 15 கிலோகிராம் எடையுடைய அரிசி செலவானது என்று சு சியேளபின் அறிமுகப்படுத்தினார்.