• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-19 16:21:43    
உலகப் பொருட்காட்சி சீனாவின் சுற்றுலா சந்தையின் மீட்சிக்குத் துணை புரியும்

cri

2009 சீனச் சர்வதேச சுற்றுலா பொருட்காட்சி 19ம் நாள் யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குன்மிங் நகரில் துவங்கியது. அடுத்த ஆண்டு உலகப் பொருட்காட்சி ஷாங்காய் மாநகரில் நடைபெறும். சீனாவின் சுற்றுலா சந்தையின் மீட்சியை இது விரைவுப்படுத்தும் என்று பொருட்காட்சியில் கலந்து கொண்ட சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் பொதுவாக கருத்து தெரிவித்தனர்.


முன்பு, திபெத் உள்ளிட்ட சீனாவின் மேற்கு மாநிலங்களில் பயணம் மேற்கொள்வதை பல ஜெர்மனி பயணிகள் விரும்பினர். ஆனால், இவ்வாண்டு முதல், ஷாங்காயில் சுற்றுலா மேற்கொள்வது பற்றிய தகவல்களை பலர் கேட்டதாக ஜெர்மனி டியாமில் சுற்றுலா கூட்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் Jens Winter கூறினார். அவர் கூறியதாவது


தற்போது சீனா மிக விரைவாக வளர்ந்து வருகின்றது. ஆகையால், உலகப் பொருட்காட்சி சரியான நேரத்திலும் சரியான இடத்திலும் நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் ஜெர்மனியர் பலர் சீனாவில் பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த ஆண்டில் மிகப் பல ஜெர்மனி பயணிகள் ஷாங்காயில் உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடுவர் என்று நம்புகின்றேன் என்று அவர் கூறினார்.


உலக நிதி நெருக்கடி, சளிக்காய்ச்சல் ஏ முதலியவற்றின் பாதிப்பால், இவ்வாண்டின் முதல் 9 திங்களில் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 9 கோடியே 39 இலட்சத்து 40 ஆயிரமாகும். இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 3.45 விழுக்காடு குறைவு. இருந்த போதிலும் குறைவு வேகம் தணிவடைந்து வருகின்றது. அடுத்த ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சுமார் 35 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் என்று சீனத் தேசிய சுற்றுலா ஆணையம் மதிப்பிட்டுள்ளது.


2010ம் ஆண்டை சீன உலகப் பொருட்காட்சி சுற்றுலா ஆண்டாக சீனா வகுத்துள்ளது என்று சீனத் தேசிய சுற்றுலா ஆணையத்தின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் liu ke zhi கூறினார். இந்நடவடிக்கை மூலம் உலகளவில் உலகப் பொருட்காட்சி பற்றியும் சீனா பற்றியும் விளம்பரம் செய்யப்படும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது,


ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சீன சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் வலுவான ஆற்றலாக மாறும். சுற்றுலா மூலம், சமூகம், பொருளாதாரம், பண்பாடு முதலிய துறைகளில் மனித குலம் பெற்றுள்ள மாபெரும் சாதனைகளை பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச்சேர்ந்த மக்கள் அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.


வெளிநாட்டுப் பயணிகள் ஷாங்காயை தவிர, சீனாவின் இதர அழகான இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதையும் சீனா வரவேற்கின்றது.