• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-19 12:16:33    
டார்பூர் பிரச்சினை தீர்வில் சீன அரசின் பங்கு

cri

ஐ.நா, ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக் ஆகிய சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் சீனா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் டார்பூர் பன்முக அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். டார்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், சீனா ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று இப்பிரச்சினையைக் கையாளும் சீனச் சிறப்புப் பிரதிநிதி லியு குய்சின் தெரிவி்த்தார்.

இப்பிரச்சினைக்கு, சீனா உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் அதிக முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இது பன்முகங்களிலும் தீர்க்கப்படவில்லை. டார்பூர் பிரச்சினை ஏற்பட்ட காரணங்கள், மிகவும் சிக்கலானவை. எனவே, இப்பிரச்சினையை எவ்வித சிக்கல்களுமின்றி தீர்த்து விட முடியாது என்று லியு குய்சின் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணும் வகையில், சர்வதேசச் சமூகம் சில சிக்கலற்ற வழிமுறைகளை மேற்கொண்டது. அப்போது, சூடான் அரசு மீது நிர்ப்பந்தம் திணிப்பதாக வலியுறுத்தப்பட்டது. இப்பிரச்சினையை ஏற்படுத்திய சிக்கலான காரணிகளை கருத்தில் கொண்டு, இக்காரணிகளையும் அடிப்படை பிரச்சினையையும் பன்முகங்களிலும் முழுமையாகவும் தீர்க்கும் வழிமுறை தேவையாகும் என்று அவர் தெரிவித்தார்.

டார்பூர் பிரச்சினைக்கு நீண்டகால முழுமையான தீர்வை காண்பதற்காக, தொடர்புடைய தரப்புகள் அமைதி முன்னேற்றப் போக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் தற்போது உணர்ந்து கொண்டதாக, லியு குய்சின் தெரிவித்தார்.

சூடான் மீது நிர்ப்பந்தம் திணிப்பதில் சீனா போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற மேலை நாடுகளின் அரசுசாரா அமைப்புகள் மற்றும் செய்தி ஊடங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிடுகையில், டார்பூர் பிரச்சினையைத் தீர்க்க சீன அரசு எப்போதும் ஆக்கப்பூர்வமாக செயலாற்றும் பங்கையே ஆற்றி வருகிறது என்று லியு குய்சின் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினையில் சீனா மீது அமத்தப்படும் குற்றச்சாட்டு நியாயமற்றது என்பதை மேலதிக பேர் அறிந்துள்ளனர். வருகின்றனர். பொதுவாகக் கூறின், இப்பிரச்சினை தொடர்பான சீன அரசின் பங்கை, சர்வதேசக் கருத்துக்களோடு இணைத்து படிப்டியாக பார்வையிட்டு வருகிறனர் என்று அவர் தெரிவித்தார்.

தவிர, டார்பூர் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீன அரசின் கோட்பாட்டையும் நிலைப்பாட்டையும் லியு குய்சின் மீண்டும் உறுதிப்படுத்தினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது

இப்பிரச்சினையை தீர்க்கும்போது, சூடானின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இது ஒரு முக்கிய கோட்பாடாகும். சூடான் அரசு, ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றியம் மற்றும் ஐ.நா என்ற 3 தரப்பு அமைப்புமுறையின் பங்கு முழுமையாக வெளிக்கொணரப்பட வேண்டும். டார்பூர் பிரச்சினையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்புகள் அமைதிப்பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலம் கருத்து வேற்றுமையை தீர்க்கும் வழிமுறைகளில் மட்டுமே, டார்பூர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும். தவிர, தொடர்புடைய நாடுகளும் பிரதேசங்களும் சர்ச்சையை நிறுத்தி உறவை மேம்படுத்த வேண்டும் என்று லியு குய்சின் கூறினார்.