• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-19 19:42:52    
டார்பூர் பிரச்சினைக்கு சீனப் பங்கு

cri

டார்பூர் பன்முக அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் கத்தாரின் தலைநகர் தோஹாவில் 18ம் நாள் நடைபெற்றது. டார்பூர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், சீனா ஆக்கப்பூர்வ பங்காற்றியுள்ளது என்று இப்பிரச்சினையைக் கையாளும் சீனச் சிறப்புப் பிரதிநிதி லியு குய்சின் தெரிவி்த்தார்.

சிக்கலான உணர்வலைகளை எழுப்பக்கூடிய டார்பூர் பிரச்சினை, வரலாறு விட்டுச் சென்ற சிக்கல்கள், மூலவள பகிர்வு, பழங்குடிகளிடை உறவு உள்ளிட்ட பல காரணிகளுடன் தொடர்புடையது. எனவே, இப்பிரச்சினையை எவ்வித சிக்கல்களுமின்றி தீர்த்து விட முடியாது. மாறாக, இதன் தீர்வுக்கு பல்வேறு தரப்புகளின் முயற்சிகள் தேவைப்படும் என்று லியு குய்சின் சுட்டிக்காட்டினார்.