• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 11:14:33    
சீனத் திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக்குழுவின் ஸ்காட்லாந்து பயணம்

cri
சீனத் திபெத்தியல் அறிஞர்களின் பிரதிநிதிக்குழு ஸ்காட்லாந்தின் பல்வேறு துறையினருடன் 19ம் நாள் பிரிட்டனின் எடின்ஃபர்க்கில் பரந்த அளவிலான பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இத்தகைய பரிமாற்றம் மூலம் சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தை பிரிட்டன் மேலதிகமாக அறிந்து கொள்வதை விரைவுபடுத்த விரும்புவதாக, திபெத்தியல் அறிஞர்கள் தெரிவித்தனர். அதே நாள் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு, திபெத்தின் பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சி, உயிரினச்சுற்றுச்சூழல் கட்டுமானம், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல அம்சங்களை இப்பிரதிநிதிக்குழு விளக்கிக் கூறியது.

திபெத் சமூக அறிவியல் கழகத்தின் திபெத்தியல் அறிஞர் தாவா ட்செரிங், திபெத்தின் உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி முக்கியமாக விவரித்தார். அவர் கூறியதாவது

தற்போது, திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சிறந்த நிலையில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, திபெத் மறிமான்கள் சின்காய் மாநிலத்திலும் திபெத் மற்றும் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசங்களிலும் முக்கியமாக வாழ்கின்றன. 1996ஆண்டு, இவற்றின் எண்ணிக்கை 50ஆயிரம் கூட இல்லை. 2008ம் ஆண்டு ஜுலை திங்கள் வரை, திபெத்தில் மட்டுமே, திபெத் மறிமான்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து50ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 5 ஆண்டுகளில் திபெத் சுற்றுச்சூழல் பாதுகாப்புப்பணிக்கு அரசு 300கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளதோடு, தொடர்பான சர்வதேச ஒத்துழைப்புத் திட்டப்பணிகளிலும் கலந்து கொண்டது. எனவே, சீன அரசு திபெத்தின் மூலவளங்கள் அனைத்தையும் சீர்குலைக்கிறது என்ற கூற்று, உண்மைக்கு புறம்பானது. காட்டு விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாத்து வருகின்றோம் என்று தாவா ட்செரிங் கூறினார்.

திபெத்தியல் அறிஞர்களுடன் மேற்கொண்ட இந்த பரிமாற்றம், திபெத் பற்றிய புரிந்துணர்வை அதிகரித்தது என்று எடின்பார்க் நேபியர் பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கல்லூரியின் தலைவர் ஜாக் வோர்டென் தெரிவி்த்தார். அவர் மேலும் கூறியதாவது

சீனாவில் பலமுறை பயணம் மேற்கொண்ட போதும், சீனாவிலிருந்து வந்த சகாக்களுடன் திபெத்தின் நிலைமை பற்றி நான் விவாதித்திருக்கிறேன். இருப்பினும், திபெத்தின் அறிஞர்களான விருந்தினருடன் இந்த கருத்து பரிமாற்றம் மேற்கொண்ட பிறகு, திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முன்பு தெரியாத தகவல்களை நான் அறிந்து கொண்டேன் என்றார் அவர்.

திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக்குழுவின் பரிமாற்ற நடவடிக்கை, மேலை நாடுகளின் மக்கள் உண்மையான திபெத்தை மேலும் நன்றாக அறிய உதவும். மேலை நாடுகளின் சில செய்தி ஊடகங்களின் நியாயமற்ற அறிவிப்பினால் ஏற்பட்ட திபெத் பற்றிய தப்பெண்ணங்களை நீக்க, இது துணைபுரியும் என்று எடின்பார்க்கின் சீன துணைத் தூதர் தான் சியுதியென் அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது

பிரிட்டன் பொது மக்கள் பலர் திபெத்தின் தற்போதைய நிலைமையை முழுமையாக அறியவில்ல. அவர்களுக்கு சீன மற்றும் சீன திபெத்தை சென்று பார்க்கும் வாய்ப்புக்களும் மிகவும் முறைவு. எனவே, இந்த செய்தி ஊடங்கள் தவறான செய்திகளை அறிவித்த போது, இந்த உண்மையில்லா தகவல்கள் அவர்களது எண்ணங்களைப் பாதித்தன என்று அவர் தெரிவித்தார்.