இவ்வாண்டு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் வரவேற்ற பயணிகளின் எண்ணிக்கை, அதன் வரலாற்றில் உயர் பதிவை உருவாக்கி, 55லட்சத்தை எட்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட, இது ஒரு மடங்கு அதிகமாகும் என்று இப்பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்தின் துணைத் தலைவர் யு யுன்குய் 20ம் நாள் தெரிவித்தார்.
உலகில் மிக தணிச்சிறப்பு உடைய பீடபூமிப் பண்பாட்டைக் கொண்ட திபெத், பல்வேறு நாடுகளின் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது. அதேவேளையில், நெடுஞ்சாலை மற்றும் இருப்புப்பாதை, விமான நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் நிலை மேம்படுவதுடன், பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று யு யுன்குய் கூறினார்.
சர்வதேச நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பினால், இவ்வாண்டு சர்வதசே பயணிகளின் விகிதம் குறைந்தது. ஆனால், பொருளாதாரம் மறுமலர்ச்சியடைவதுடன், கடந்த 2 திங்களில் திபெத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
|