சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், உலகில் மிக வறிய நாடுகளுக்கு உலக வங்கி இவ்வாண்டின் அக்டோபர் திங்கள் வைரயான 15திங்களில் வழங்கிய நிதியுதவி 1,690கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இந்நிதித் தொகை, வரலாற்றில் மிக அதிகமான பதிவை உருவாக்கியது. கடந்த காலக்கட்டத்தில் வழங்கிய நிதித்தொகையை விட, இது 50விழுக்காடு அதிகமாகும் என்று உலக வங்கி 20ம் நாள் வெளியிட்ட தகவலில் அறிவித்தது.
நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளுக்கான உதவியை உலக வங்கி அதிகரிக்கும் என்று இவ்வங்கியின் தலைவர் ராபெர்ட் சோல்லிக் தெரிவித்தார்.
|