1999முதல் 2008ம் ஆண்டு வரையான காலத்தில், சீனத் தேசிய இனப் பிரதேங்களில் வாழ்கின்ற விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம் பெருமளவில் உயர்ந்துள்ளது. அதேவேளையில், கிராமப்புறங்களிலுள்ள வறிய மக்கள் தொகை முன்பை விட 2கோடியே50லட்சம் குறைந்தது. 21ம் நாள் சீனத் தேசிய இன விவகார ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் இதைக் கூறியது.
1999ம் ஆண்டு மேற்குப் பகுதியின் மாபெரும் வளர்ச்சி என்ற உத்திநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின், விவசாயிகளுக்கு நலன்களை தரும் ஒரு தொகுதித் திட்டப்பணிகளை சீன அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றின் மூலம், கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் தெளிவாக மேம்பட்டுள்ளன. விவசாயிகள்ஸ மற்றும் ஆயர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலையும் பெருமளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|