• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-23 11:06:45    
இந்திய தலைமையமைச்சரின் அமெரிக்க பயணம்

cri

இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங் நவம்பர் 23ம் முதல் 25ம் நாள் வரை, அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். பராக் ஒபாமா அமெரிக்க அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின், அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக, மன்மோகன் சிங் ஆவார்.

அமெரிக்க வணிகச் சங்கமும், அமெரிக்க-இந்திய தொழில் நிறுவனக் குழுவும் 23ம் நாள் கூட்டாக நடத்தும் வரவேற்பு விழாவில், மன்மோகன் சிங் கலந்து கொண்டு உரைநிகழ்த்துவார். அதற்கு பின், வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவின் Think Tank தூதாண்மை உறவுக் குழுவும், Woodrow Wilson மையமும் கூட்டாக மேற்கொள்ளும் நடவடிக்கையில், அவர் உரைநிகழ்த்துவார். அதே நாள், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Robert Gates மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் அவைத் தலைவர் Nancy Pelosiஅம்மையாரை அவர் சந்தித்துரையாடுவார். 24ம் நாள் காலை, அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையின் தென் பகுதி புல் பரப்பில், மன்மோகன் சிங்கிற்கான அதிகாரப்பூர்வ வரவேற்பை வழங்குவார். அதன் பின், மன்மோகன் சிங்கின் பிரதிநிதிக் குழு, அமெரிக்க தரப்புடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும். அதே நாளின் நண்பகல், அமெரிக்கத் துணை அரசுத் தலைவர் Joe Bidenஉம் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அம்மையாரும், மன்மோகன் சிங்கிற்கான வரவேற்பு விருந்து ஒன்றை நடத்துவர். அன்றிரவு, பராக் ஒபாமா, மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவியாருக்கு, அதிகாரப்பூர்அரசு நிலை விருந்தளிப்பார். அதற்கு பின், பராக் ஒபாமாவும் மன்மோகன் சிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்திய திருமண பாணியிலான கூடாரத்தில், அரசு நிலை விருந்து நடைபெறும் என்று தெரிய வருகின்றது.

மன்மோகன் சிங்கின் இந்த பயணத்துக்கு, அமெரிக்க அரசு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றது. உத்திநோக்கு ஒத்துழைப்பு, எரியாற்றல் மற்றும் காலநிலை மாற்றம், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வேளாண் ஒத்துழைப்பு, கல்வி மற்றும் வளர்ச்சிப் பேச்சுவார்த்தை, அறிவியல் தொழில் நுட்பம் சுகாதாரம் மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பு ஆகிய 5 பெரிய துறைகள் குறித்து, இரு தரப்பினரும் விவாதம் நடத்துவர். இந்திய படைக்கான ஆயுத விற்பனை அளவை விரிவாக்குவது, பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய போர் தந்திர கட்டுக்கோப்பு ஒத்துழைப்பு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒத்துழைப்பு ஆகியவை உத்திநோக்கு ஒத்துழைப்பு தொடர்பான மிக முக்கிய மூன்று கருத்துக்களாக விவாதிக்கப்பட உள்ளன. மன்மோகன் சிங் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வதற்கு முன், தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் Robert Blake, இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, வாஷிங்டன் போஸ்ட் ஏட்டின் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, இந்தியாவும் அமெரிக்காவும், சீரான உத்திநோக்கு கூட்டாளி உறவை நிலைநிறுத்தி வருகின்றன என்று மன்மோகன் சிங் கூறினார். அமெரிக்காவுடன், இரு நாட்டு உறவை உறுதிப்படுத்துவதற்கான உத்திநோக்கு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். மேலும், ஆக்கப்பணிப் பயன்பாட்டு அணு ஆற்றல் தொழில் நுட்ப விற்பனைத் துறையில், இந்தியா மீதான கட்டுப்பாட்டை அமெரிக்கா தளர்த்த வேண்டும் என்று மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார்.