30க்கு அதிகமான வெளிநாட்டுக் குடும்பங்களும் அவர்களின் சீன குழந்தைகளும் பெய்சிங்கிற்கு வந்து, 23ம் நாள் சீனாவிலான வேர் தேடும் பயணம் மேற்கொள்ளத் துவங்கினர்.
வணக்கம் சீன வானொலி நிலையத்தின் நேயர்களே. நான் பிரிட்டன் நாட்டு Elisabeth.
இந்த அழகான சிறுமி சரளமான ஆங்கில மொழியை பேசிரைலும், அவரது சொந்த ஊர் சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் ஹான்காங் நகராகும். 2003ம் ஆண்டு, பிரிட்டன் நாட்டுத் தந்தையுடன், 1 வயதான Elisabeth சீனாவிலிருந்து தத்துப்பிள்ளையாக பிரிட்டனுக்குச் சென்றன. தற்போது, 7 வயதான Elisabeth சீனாவை பார்வையிட வந்துள்ளன. இதர பிரிட்டன் சிறுமிகளோடு ஒப்பிடுகையில் அவறிடம் பெரிய வித்தியாசமில்லை.
54 வயதான Lawrence Dejongh, Elisabethவின் தந்தையாவார். 2000ம் ஆண்டு முதல், குழந்தையை தத்து எடுக்க அவரும் அவரது மனைவியும் விரும்பி முயற்சி செய்தனர். 2003ம் ஆண்டு, Elisabethஐ அவர்கள் வெற்றிகரமாக தத்து எடுத்தனர். இந்த குடும்பம் தற்போது சீனாவுக்கு வந்துள்ளது. Lawrence Dejongh கூறியதாவது:
Elisabethவுக்கு ஒரு தங்கையை தேட நாங்கள் விரும்புகின்றோம். முதலாவதாக, 2 குழந்தைகள் ஒருவன் மற்றவனுக்கு உதவியளிக்கலாம். இரண்டாவதாக, வயது வந்த பின், அவர்கள் சமவயதுள்ளவர்களாக வளரலாம் என்று அவர் கூறினார்.
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய 6 நாடுகளிலிருந்து வந்த 37 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் சீனாவிலான தங்களது வேர் தேடும் பயணம் மேற்கொள்ளத் துவங்கினர். திட்டப்படி, பெய்சிங்கில் அவர்கள், சீன பெருஞ்சுவர், விலங்கியல் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்ட பின், குழந்தை காப்பகங்களுக்குச் சென்று, அங்கே வாழ்ந்த செவிலித் தாய்களுடன் நன்றி தெரிவிப்பு விழாவை கூட்டாக கொண்டாடுவர்.
கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளின் இறுதி முதல், பல பத்து ஆயிரம் சீன குழந்தைகளை வெளிநாட்டினர் தத்து எடுத்துள்ளனர். இந்த குழந்தைகளின் நலமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் கண்டிப்பான வரையறைகளை இயற்றியுள்ளன என்று சீனத் துணை பொதுத் துறை அமைச்சர் Dou Yupei கூறினார்.
வெளிநாட்டினருக்கு குழந்தைகளை தத்துகொடுப்பது தொடர்பான பணி அன்பு நிறைந்த பணியாகும். வெளிநாடுகளுக்கு குழந்தைகளை நாங்கள் அனுப்புவதுடன், இந்த குழங்தைகள் மற்றும் அவரது பெற்றோர்கள் சீனாவுக்கு திரும்ப வேண்டுமென விரும்புகின்றனோம். வெளிநாடுகளில் இக்குழந்தைகள் வாழ்ந்த போதிலும், சொந்த ஊர் சீனாவாகும். உலகின் எந்த நாடுகளில் அவர்கள் வாழ்ந்தாலும், நாங்கள் கவனமுடன், நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றோம்.
|