இன்றைய கூட்டத்தின் துவக்கவிழாவில் உலக மதிப்பீட்டு நிறுவன சம்மேளனத்தின் தலைவர் Lim Lan Yuan உரைநிகழ்த்துகையில் நிதி நெருக்கடியின் பின்னணியில் பல்வேறு நாடுகள் நிதிச் சந்தை மீதான கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளன. சொத்து மதிப்பீட்டில் நிதிச் சொத்தின் உண்மையையும் அதன் உள்ளார்ந்த மதிப்பையும் கண்டறிய முடியும். இது நிதி இடர்பாட்டை தடுத்து நிதிச் சந்தையின் நிதானம் மற்றும் பாதுகாப்பை பேணிக்காக்கும் முக்கிய வழிமுறையாகும் என்று குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது.
சர்வதேச நிதி நெருக்கடி பல்வேறு நாடுகளுக்கு உற்சாகமான உரையாடல் நடத்தும் வாய்ப்பை வழங்கியது. அதேவேளையில் அவை இதை சமாளிக்கும் மதிப்புக்குரிய வாய்ப்பை பகிர்ந்து கொண்டுள்ளன. நிதிச் சொத்து மதிப்பீட்டுத் துறையின் வளர்ச்சியை மேலும் சிறப்பாக முன்னேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோர் விவாதம் நடத்தி நிதிச் சந்தையின் பாதுகாப்புக்கும் சொத்து மதிப்பீட்டுக்கும் இடையிலான தொடர்பை மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
சீன சொத்து மதிப்பீட்டுச் சங்கத்தின் தலைவர் He Bang Jing அம்மையார் கூட்டத்தில் உரைநிகழ்த்துகையில் சீன சொத்து மதிப்பீட்டுத் துறை இப்பணியை வலுப்படுத்தி நிதிச் சந்தையின் பாதுகாப்பை பயன் தரும் முறையில் பாதுக்காக்கும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது.
மதிப்பீட்டாளர்களின் கல்வியறிவை வலுப்படுத்துவதிலும் இத்துறையின் தொழில் செய்முறையிலும் உண்மையாக கவனம் செலுத்த வேண்டும். நிதிச் சொத்து மதிப்பீட்டுத் தத்துவ ஆய்வை முழுமூச்சுடன் முன்னேற்ற வேண்டும். இத்துறை மேலும் உயர் தொழில் தரத்தையும் சிறந்த தொழில் வரையறைகளையும் கொண்டதாக மாற வேண்டும். அதன் மூலம் நிதித் துறைக்கு சிறந்த சேவை புரிய முடியும் என்று அவர் கூறினார்.
சீன சொத்து மதிப்பீட்டுத் துறை கடந்த நுற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் இறுதியில் நிறுவப்பட்டது. 3000 மதிப்பீட்டு வாரியங்கள், 30 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் ஆகியோர் இத்துறையில் சேவை புரிகின்றனர். தற்போதைய உலகமயமான நிதி நெருக்கடியின் உலகதழுவிய நிலைமையில் சீன சொத்து மதிப்பீட்டுத் துறை வெளிநாடுகளின் மதிப்பீட்டுத் துறைகளுடன் ஒத்துழைப்பை ஆழமாக்க விரும்புவதாக தலைவர் He Bang Jing அம்மையார் கூட்டத்தில் தெரிவித்தார்.
|