சீன வெளியுறவு அமைச்சர் யாங்சியேச்சு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் அம்மையாருடன் 24ம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் சீனப் பயணம் பெற்றுள்ள வெற்றிகளை அவர்கள் வெகுவாக பாராட்டினர். இப்பயணத்தை புதிய துவக்கமாக கொண்டு, இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய பல்வேறு கருத்தொற்றுமைகளை நிறைவேற்றி, 21ம் நூற்றாண்டின் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பில் பன்முக சீன-அமெரிக்க உறவைக் கூட்டாக தூண்டி, உலகின் அமைதி மற்றும் கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், ஈரானின் அணு ஆற்றல் பிரச்சினை பற்றி, யாங்சியேச்சும் ஹிலரி கிளிண்டன் அம்மையாரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
|