• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 15:22:15    
கடல்கொள்ளையரை ஒடுக்குவதில் துறையில் சர்வதேச ஒத்துழைப்பு

cri
26வது சர்வதேசக் கடல் விவகார அமைப்புக் கூட்டம் 23ம் நாள் பிரிட்டனின் இலண்டன் நகரில் துவங்கியது. கடல்கொள்ளையரை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு  நாடுகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் Efthimios E Mitropoulos துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், 2008ம் ஆண்டு முதல் சர்வதேசக் கடல் விவகாரத் துறையில் காணப்பட்ட முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் அறைகூவல்கள் பற்றி விவரித்தார். நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் கடல்கொள்ளையர் நிலைமையைச் சமாளிக்க, சர்வதேசக் கடல் விவகார அமைப்பு, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம், நேட்டோ முதலிய சர்வதேச மற்றும் பிரதேச அரசியல் அமைப்புகளுடனும் இராணுவ அமைப்புகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது
ஒரே வழிமுறையில் மட்டும் கடல்கொள்ளையர் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. ஆகையால், பல்வேறு தரப்புகள் பரந்தளவில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.
சீனப் பிரதிநிதிக் குழு தலைவரும் சீனத் துணைப் போக்குவரத்து அமைச்சருமான xu zu yuan கூறியதாவது
முக்கிய சர்வதேசக் கப்பல் போக்குவரத்து வழிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியின் மீது சீன அரசு உயர் கவனம் செலுத்துகின்றது. 2008ம் ஆண்டு முதல், சோமாலிய கடல்கொள்ளையர் பிரச்சினை தீவிரமாகி வருகின்றது. தொடர்புடைய சர்வதேசச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பவையின் தீர்மானங்களின் படி, சோமாலிய கடல்கொள்ளையரையும் ஆயுதங்களைக் கொண்டு கப்பல்களைக் கடத்தல் செய்யும் நடவடிக்கையையும் ஒடுக்கி, இந்தக் கடற்பிரப்பிலான இயல்பான கப்பல் போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மீட்டு பேணிக்காப்பதைச் சீனா ஆதிரிக்கின்றது என்று அவர் கூறினார்.
இவ்வாண்டின் ஜுலை திங்களுக்கு முன், சோமாலிய கடற்பரப்பிலும் ஏதென் வளைகுடா பிரதேசத்திலும் கடல்கொள்ளையரை ஒடுக்குவதில் சேவை புரியும் பல்வேறு நாடுகளின் இராணுவ கப்பல் படைப் பிரிவுகளின் அதிகாரிகளையும் போர் வீரர்களையும் பாராட்டும் வகையில், கூட்டத்தில், சர்வதேசக் கடல் விவகார அமைப்பு அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் மனித குலத்துக்கான சிறப்பு சேவை பரிசை வழங்கியது.