• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-24 19:31:40    
சீன-ஐரோப்பிய பேச்சுவார்த்தை

cri

நடைபெற விருக்கும் சீன-ஐரோப்பிய தலைவர்களின் 12வது பேச்சுவார்த்தை, சீன-ஐரோப்பிய உறவு மேலும் வளர்ச்சியடைவதற்கு புதிய உயிராற்றலை தருவது உறுதி. சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சாங் செய்ஜுன் 24ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாறு தெரிவித்தார்.

இரு தரப்புகளின் கலந்தாய்வு மூலம், இந்தப் பேச்சுவார்த்தை நவம்பர் 30ம் நாள் சீனாவின் ச்சியாங்சூ மாநிலத்தின் நான்ஜிங் நகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமையமைச்சர் வென் ச்சியாபாவ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பு தலைவர் வகிக்கும் நாடான ஸ்வீடனின் தலைமை அமைச்சர் பிரடரிக் ரேன்ஃபெல்ட்த், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பரோசோ ஆகியோர் இதற்கு கூட்டாக தலைமை தாங்குவர்.

இரு தரப்புகளுக்குமிடையில் மிக உயர் நிலை அரசியல் பேச்சுவார்த்தை அமைப்புமுறையான இது, இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு சிறந்த உத்திநோக்கு மிக்க உயர்வான பங்கை ஆற்றும். அத்துடன், சீனா இதில் மாபெரும் கவனம் செலுத்துகின்றது என்று சாங் செய்ஜுன் கூறினார்.