புதுப்பிக்க வல்ல எரியாற்றல் தொடர்பாக, ஐரோப்பிய முதலீட்டு வங்கி, பாகிஸ்தான் அரசுடன், 24ம் நாள் லக்சம்பர்க் நகரில் உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டது. உடன்படிக்கையின்படி பாகிஸ்தானில் புதுப்பிக்க வல்ல எரியாற்றல் திட்டப்பணிகளின் கட்டுமானத்தை வளர்ப்பதற்காக, ஐரோப்பிய முதலீட்டு வங்கி, பாகிஸ்தானுக்கு சுமார் 15 கோடி அமெரிக்க டாலர் கடனை வழங்கும்.
காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்காக, பாகிஸ்தான் அரசு, அதன் புதுப்பிக்க வல்ல எரியாற்றல் பற்றிய திட்டப்பணிகளில் 220 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டது. தவிர, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிறுவனம் முதலிய நிறுவனங்களும், இத்திட்டத்துக்கு நிதி மற்றும் தொழில் நுட்ப ஆதரவளிக்கும் என்று அறியப்படுகிறது.
|