சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழுவின் தலைவர் ஜியாச்சிங்லின் 24ம் நாள் ஈக்வடோரின் தலைநகர் Quitoவில், அந்நாட்டு தேசிய மக்கள் பேரவைத் தலைவர் Fernando Cordero Cuevaவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈக்வடோருடனான உறவை வளர்ப்பதில், சீனா அதிகக் கவனம் செலுத்தி வருகிறது என்று ஜியாச்சிங்லின் தெரிவித்தார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு, ஈக்வடோர் தேசிய மக்கள் பேரவையுடன் தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டு நட்புறவின் வளர்ச்சிக்கு பங்காற்ற விரும்புவதாக ஜியாச்சிங்லின் கூறினார்.
இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கிடை பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்காக மேலதிக பங்காற்ற வேண்டும் என்று Fernando Cordero Cueva விருப்பம் தெரிவித்தார்.
|