அமெரிக்க-இந்திய உத்திநோக்கு உறவு
cri
அமெரிக்காவும் இந்தியாவும் 24ம் நாள், வாஷிங்டன் மாநகரில், புரிந்துணர்வு குறிப்பாணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு, பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, பண்பாட்டுக் கல்வி மற்றும் வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு முதலிய துறைகளில், இரு தரப்பு உத்திநோக்குக் கூட்டாளியுறவை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 24ம் நாள், இந்திய தலைமயமைச்சர் மன்மோகன் சிங்குடன், வெள்ளை மாளிகையில், பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புறவு, பொது அக்கறைக் கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து, இரு தரப்பினரும் பரந்த அளவில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பல ஒத்துழைப்பு ஆவணங்களிலும் அவர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்க-இந்திய ஆக்கப்பணி அணு ஆற்றல் ஒத்துழைப்பு உடன்படிக்கையை அமெரிக்கா முழுமையாக செயல்படுத்தும் என்று பராக் ஒபாமா மீண்டும் வலியுறுத்தினார்.
|
|