• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 11:11:43    
அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பு கூட்டாளியுறவு

cri
அமெரிக்காவும் இந்தியாவும் 24ம் நாள், வாஷிங்டன் மாநகரில், புரிந்துணர்வு குறிப்பாணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு, பொருளாதாரம், வர்த்தகம், வேளாண்மை, பண்பாட்டுக் கல்வி மற்றும் வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு முதலிய துறைகளில், இரு தரப்பு உத்திநோக்குக் கூட்டாளியுறவை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 24ம் நாள், இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குடன், வெள்ளை மாளிகையில், பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புறவு, பொது அக்கறைக் கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து, இரு தரப்பினரும் பரந்த அளவில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பல ஒத்துழைப்பு ஆவணங்களிலும் அவர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அமெரிக்க-இந்திய ஆக்கப்பணி அணு ஆற்றல் ஒத்துழைப்பு உடன்படிக்கையை அமெரிக்கா முழுமையாக செயல்படுத்தும் என்று பராக் ஒபாமா மீண்டும் வலியுறுத்தினார்.
பயங்கரவாதம், இரு நாடுகளையும் சர்வதேச பாதுகாப்பையும் அச்சுறுத்துகின்றது. பயங்கரவாத எதிர்ப்புக்கான உறவை வலுப்படுத்தி, பயங்கரவாதத்தை பயனுள்ள முறையில் தடுக்க இரு தரப்பும் பாடுபடும். பேரழிவு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பப் பரவலை தடுக்கும் வாக்குறுதியை நனவாக்க இரு தரப்பினரும் முயற்சி செய்யும்.