அமெரிக்க இந்திய ஒத்துழைப்பு
cri
பிரதேச மற்றும் உலகின் நிதானத்தையும் அமைதியையும் நனவாக்குவதைத் தூண்டப் பாடுபட்டு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் முழு உலகின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த, அமெரிக்காவும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. இரு நாட்டின் அரசுகளும் 24ம் நாள் தொடர்புடைய புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிட்டன. அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தலைமையமைச்சர் Manmohan Singhஐ, அமெரிக்க அரசுத் தலைவர் Barack Obama 24ம் நாள் சந்தித்துரையாடினார். இரு நாடுகளுக்கும், பிரதேசம் மற்றும் உலகின் பாதுகாப்புக்கும் பயங்கரவாதம் அச்சுறுதலாக அமையும் என்று இரு தலைவர்களும் ஒரு மனதாக கருதினர். பயங்கரவாத எதிர்ப்பு பற்றிய உறவை வலுப்படுத்தி, பயங்கரவாதத்தைப் பயன் தரும் முறையில் சமாளிக்கும் வகையில், மேலதிக முயற்சிகளை மேற்கொள்வது என இரு நாடுகளும் முடிவு செய்தன என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
|
|