• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 17:47:53    
பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு முயற்சி

cri

நவம்பர் 25 நாள் பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு நாளாகும். இதை முன்னிட்டு சீனத் தேசிய மகளிர் சம்மேளனம், ஐ.நா மக்கள் தொகை நிதியம், ஐ.நா மகளிர் வளர்ச்சி நிதியம் ஆகியவை பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு மற்றும் இதில் ஆண்களின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கை கூட்டாக நடத்தின. சீன தேசிய மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் ச்சுன்யியன் அம்மையார் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது.
 
சீனா மிக பெரிய நாடு. குடும்ப வன்முறை ஒழிப்பு செயல்பாடுகளில் மாபெரும் சமமற்ற நிலை நிலவுகின்றது. இந்த பணியை தொடர்ந்து முன்னேற்றுவதற்கு சமூகத்தின் பல்வேறு வட்டாரங்கள் தங்களது ஆராய்ச்சி சாதனைகளை பகிர்ந்து கொள்ளும் போது உண்மையான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்கள் இதில் பங்கெடுக்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.சீன மக்கள் தொகை மற்றும் குடும்ப நல்ல திட்ட ஆணையத்தை சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் துணைத் தலைவர் ஹுகுன்தோ கூறியதாவது. தந்தை, கணவர், அரசியல் தலைவர்கள், கூட்டாளி போன்ற பெருமையை பெற்றுள்ள ஆண்கள் மகளிரின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். குடும்ப இன்பத்தை அதிகரித்து மகளிருடன் இணைந்து கூட்டாக கடப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


பாலியல் தன்மையில் காணப்படும் வேறுபாடே உலகில் மகளிர் மீது வன்முறை மேற்கொள்ளப்படுவதற்கு முக்கிய காரணமாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். சீனாவில் பண்டைகாலம் தொட்டு பெண்களை விட ஆணே முக்கியம் என்ற கருத்து நிலவியதால் குழந்தை பருவத்திருந்தே பாலியல் தன்மையில் சமமற்ற நிலை தோன்றிவிட்டது என்று சீனாவுக்கான ஐ.நா மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி Bermard கூறினார்.

இதை குறித்து துணைத் தலைவர் ச்சுன்யியன் அம்மையார் கூறியதாவது. மகளிர் மீதான வன்முறை மற்றும் பாலியல் ரீதியிலான வேறுபாடு ஆகியவையே ஆண் பெண் ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணிகளாகும். மகளிருக்கெதிரான வன்முறையை நாம் எதிர்க்கின்றோம். பெண்ணும் ஆணும் சமம் என்ற நாகரிக எண்ணத்தை பரப்புரை செய்கின்றோம். எதிர்காலத்தில் சீனா இது தொடர்பான சட்டவிதிகள், கொள்கைகள் ஆகியவற்றை உற்சாகத்துடன் முழுமையாக்கி பாலியல் ரீதியில் சமத்துவம் என்ற இலக்கை நிறைவேற்ற பாடுபடும் என்று அவர் கூறினார்.


1999ம் ஆண்டு நவம்பர் திங்களில் ஐ.நா பொதுப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25ம் நாள் சர்வதேச மகளிர் மீதான வன்முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்பட அத்தீர்மானத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.