இவ்வாண்டின் முற்பாதி வரை, மேற்குப் பகுதியில் விளைநிலங்களை மீண்டும் காடுகளாக மாற்றும் திட்டப்பணிக்கு, சீனா மொத்தம் 11 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இப்பிரதேசத்தில் மீண்டும் காடுகளாக மாற்றும் விளைநிலங்களின் பரப்பு, சுமார் ஒரு கோடியே 60 இலட்சம் ஹெக்டராகும்.
சீனத் தேசிய வனத்தொழில் ஆணையத்தின் தலைமை பொறியியலாளர் யாவ் சாங்தியென் 25ம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், இத்திட்டப்பணி மூலம், மேற்கு சீனாவின் இயற்கை சுற்றுச்சூழல் மேம்பட்டு, விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.
1 2
|