பிரான்ஸில் சீனத் திபெத் பிரதிநிதிக் குழு
cri
பிரான்ஸில் பயணம் மேற்கொண்டு வரும் சீனத் திபெத்தியல் அறிஞர் குழு 24ம் நாள் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-ஆஸ்திரேலிய பிரிவின் துணைத் தலைவர் Laplancheஉடன் உரையாடல் கூட்டம் நடத்தியது. புரிந்துணர்வை வலுப்படுத்துவது, பரிமாற்றத்தையும் தொடர்பையும் அதிகரிப்பது ஆகியவை பற்றி இரு தரப்பினரும் ஆழமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். திபெத்தின் அமைதியான சமூக நிலைமை, வளர்ந்து வரும் பொருளாதாரம் முதலியவை பற்றி திபெத் பிரதிநிதிக் குழு எடுத்துக் கூறியது. புரிந்துணர்வை அதிகரிக்கும் அடிப்படையில், சீனத் திபெத்-பிரான்ஸ் ஒத்துழைப்பையும் உறவையும் வளர்க்க விரும்புவதாக இக்குழுவின் தலைவர் Shen kai yun தெரிவித்தார். தொடர்பை அதிகரித்து, இருதரப்புப் புரிந்துணர்வை வலுப்படுத்துவது, எதிர்ப்புக்குப் பதிலாக பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட திபெத் பிரதிநிதிக் குழுவின் கருத்துக்களுக்கு Laplanche ஆதரவு தெரிவித்தார்.
|
|