சீன எண்ணெய் குழாய் ஏற்றுமதி மீதான தண்டனை நடவடிக்கை
cri
ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெய் குழாய்களுக்கு சீனா மானியம் வழங்கியதன் காரணமாக, அவற்றின் மீது 10.36 முதல் 15.78 விழுக்காடு வரையான மானிய எதிர்ப்பு வரி வசூலிக்க அமெரிக்க வணிகத் துறை 24ம் நாள் இறுதி தீர்ப்பு அளித்தது. இவ்வழக்குடன் தொடர்பான மதிப்பு சுமார் 270 கோடி அமெரிக்க டாலராகும். சீனா மீதான அமெரிக்காவின் மிக அதிக மதிப்புள்ள வர்த்தகத் தடை நடவடிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா சீனாவின் சந்தை தகுநிலையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், பொருள் குவிப்பு விற்பனை மற்றும் மானிய எதிர்ப்பு வரியை தன் விருப்பப் படி அதிகரிப்பது, சீனாவின் இரும்புருக்கு ஏற்றுமதியைப் பெரிதும் பாதித்துள்ளது என்று இதற்கு முன் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாவ் சியேன் தெரிவித்திருந்தார். 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டில் அளித்த வாக்குறுதியையும், அண்மையில் நடைபெற்ற சீன-அமெரிக்க வணிக மற்றும் வர்த்தக இணைப்பு ஆணையக் கூட்டத்தில் எட்டப்பட்ட பொது கருத்தையும் அமெரிக்கா கடைபிடித்து, வர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, நிதி நெருக்கடியை சீனாவுடன் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
|
|