மன்மோகன் சிங்கும் 24ம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின், 6 புரிந்துணர்வு குறிப்பானைகள் உள்ளிட்ட சில ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் இரு தலைவர்களும் கையொப்பமிட்டனர். ஒபாமா அரசு பதவி ஏற்றப் பின் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட முதலாவது இந்தியத் தலைவர் மன்மோகன் சிங் ஆவார். ஒபாமா அரசு அவரை மிகவும் மதிப்புடன் வரவேற்றதுடன், பேச்சுவார்த்தையில் அமெரி்க்க-இந்திய உறவின் முக்கியத்துவத்தை பல முறை வலியுறுத்தி, இரு நாட்டு உத்தி கூட்டாளியுறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. அமெரிக்க-இந்திய உறவு 21வது நூற்றாண்டில் தீர்க்கமான உறவுகளில் ஒன்றாகும் என்று ஒபாமா வரவேற்பு விழாவில் தெரிவித்தார். இந்த உரை, இந்தியாவுக்கு ஒரு தெளிவான அறிகுறியை வெளிப்படுத்தியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது, முன்பு புஷ் அரசு மேற்கொண்ட இரு தரப்புறவின் சீரான வளர்ச்சிப் போக்கை நடப்பு அமெரிக்க அரசு நிலைநிறுத்தி, ஒத்துழைப்பு அளவையும் ஆற்றலையும் விரிவாக்கும். வர்த்தகம் இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கின்றது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க-இந்திய இரு தரப்பு வர்த்தகம் வேகமாக வளர்ந்துள்ளது. இரு தரப்பு வர்த்தகத் தொகை 1990ம் ஆண்டில் இருந்த 500 கோடி அமெரிக்க டாலரிலிருந்து 2008ம் ஆண்டிலான 5000 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது. அமெரிக்கா இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. பொருளாதார மற்றும் வர்த்தக உறவை விரிவாக்குவது இரு நாடுகளுக்கு மேலும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், இரு நாட்டுப் பொருளாதார மீட்சியை விரைவுப்படுத்தும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா கூறினார். 23ம் நாள் அமெரிக்க வணிகச் சங்கத்தில் உரை நிகழ்த்துகையில், இந்தியாவின் அடிப்படை வசதி திட்டப்பணிகளில் முதலீடு செய்ய மன்மோகன் சிங் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். பொருளாதார அதிகரிப்புக்கு ஆதரவாக, எரியாற்றல், போக்குவரத்து, நகர அடிப்படை வசதி முதலிய துறைகளில் இந்தியாவுக்கு பெரும் அளவிலான முதலீடு தேவைப்படுகின்றது என்று மன்மோகன் சிங் கூறினார். இந்தியா ஆக்கப்பணி அணு திட்டப்பணியை இராணுவ அணு திட்டப்பணியிலிருந்து பிரிப்பதன் அடிப்படையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஆக்கப்பணி அணு ஆற்றல் ஒத்துழைப்பு உடன்படிக்கையை அமெரிக்க அரசு தொடர்ந்து ஆதரிக்கும் என்று ஒபாமா தெரிவித்தார். காலநிலை மாற்றச் சமாளிப்பு, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு போர், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதி்ர்ப்பு, பொருளாதார வர்த்தகம் மற்றும் வேளாண்மை, பண்பாட்டுக் கல்வி மற்றும் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு முதலிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
|