• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-25 11:49:15    
இரு கரை உறவின் வளர்ச்சி

cri
தைவான் நீரிணையின் இரு கரை உறவு சங்கம் மற்றும் தைவான் நீரிணையின் பரிமாற்ற நிதியத்தின் தலைவர்களது 4வது கூட்டம் டிசம்பர் திங்கள் பிற்பாதியில் தைவானில் நடைபெறும் என்று சீன அரசவை தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யீ 25ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். கூட்டத்தில் இரு தரப்புகள் இரு கரை பொருளாதார ஒத்துழைப்பு கட்டுக்கோப்பு உடன்படிக்கை பற்றி கருத்துக்களைப் பரிமாறக் கூடும் என்று அவர் கூறினார்.
இரு கரை பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் அதேவேளையில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இரு கரையுறவிலான அரசியல் இராணுவ பாதுகாப்பு முதலிய பிரச்சினைகளைப் படிப்படியாக தீர்க்க வேண்டும் என்று பெரு நிலப் பகுதி கருதுவதாக யாங் யீ குறிப்பிட்டார். இரு தரப்புப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி ஆழமாக்கி, இரு கரை உடன்பிறப்புகளுக்கு மேலும் அதிக நன்மை பயக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.