தெற்கு பிலிப்பைன்ஸின் மகுயின்டனௌ மாநிலத்தில் 23ம் நாள் நிகழ்ந்த படுகொலைச் சம்பவத்துக்கு, பிலிப்பைன்ஸின் செய்தித் துறையினர்கள் 24ம் நாள் வன்மையாக கண்டனம் தெரிவித்ததோடு, நாட்டின் செய்தியாளர்களின் பாதுகாப்பை பயன்தரும் முறையில் உத்தரவாதம் செய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
செய்தியாளர்களின் வழமையற்ற இறப்பால், உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஈராக்கைத் அடுத்து பிலிப்பைன்ஸ் 2-வது இடம் வகிக்கிறது என்று பிலிப்பைன்ஸின் புலனாய்வு இதழியல் மையத்தின் இயக்குநர் மலோ மங்கஹாஸ் அம்மையார் தெரிவித்தார். கடந்த 13ஆண்டுகளில், பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட செய்தியாளர்களின் மொத்த எண்ணிக்கை 116 என்றும் அவர் கூறினார்.
தற்போதைய படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 52ஐ எட்டியதாக தெரிகின்றது.
|