மும்பை பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய வழக்கு
cri
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பங்கு கொண்டதாக ஐயப்பட்ட 7 பேர், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் ஒன்றில் 25ம் நாள் விசாரனை செய்யப்பட்டனர். இந்த ஐயத்துக்குரிய 7 குற்றவாளிகள், பாகிஸ்தானிலான இஸ்லாமிய அதி தீவிரவாத அமைப்பான Lashkar-e-Taibaஐச் சேர்ந்தவர். இத்தாக்குதலை ஏற்பாடு செய்யவர்களுக்கு பின்னணிச் சேவையை வழங்குவதில் அவர்கள் பங்கு கொண்டவர் என ஐயப்படுகின்றார் என்று உள்ளூர் தொலைகாட்சி நிலையம் அறிவித்தது. நீதி மன்றத்தில், ஐயத்துக்குரிய 7 குற்றவாளிகள் அனைவரும், அவர்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். அதே வேளையில், நீதி மன்றம் அவர்களின் பினை கோரிக்கையை நிராகரித்து, டிசம்பர் 5ம் நாள் விசாரனை மீண்டும் நடைபெறுவதாக அறிவித்தது.
|
|